கமல்ஹசன் தயாரிப்பில்  நடிகர் சிம்பு!! என்ன பிளான் போட்டுர்காங்க ரசிகர்கள் ஆர்வம் !

0
77
Actor Simbu who volunteered to act in Kamal Haasan production? What a plan fans are interested in!
Actor Simbu who volunteered to act in Kamal Haasan production? What a plan fans are interested in!

கமல்ஹசன் தயாரிப்பில்  நடிகர் சிம்பு! என்ன பிளான் போட்டுர்காங்க ரசிகர்கள் ஆர்வம் !

லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் 400 கோடி வசூலை எட்டி உள்ளது. விக்ரம் படத்திற்கு பிறகு கமலஹாசனின் மார்க்கெட் வேற லெவல் என்பதால் அடுத்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவாரா என்ற கேள்விக்குறியாகவே உள்ளது.

இந்நிலையில் சின்னத்திரை ரசிகர்களின் பிடித்தமான பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக இருக்கும் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை 5 எபிசோடுகளை வெற்றிகரமாக முடித்துவிட்டது.தற்போது ஆறாவது சீசனை வரும் அக்டோபர் மாதம் துவங்கவுள்ளது.

ஏற்கனவே நடந்து முடிந்த ஐந்து சீசன்களையும் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.இதைத்தொடர்ந்து விக்ரம் படத்தின் மூலம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் புது முயற்சியாக ஓடிடி தளத்தில் வெளியான பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை கமலஹாசன் தொகுத்து வழங்காமல் அவருக்கு பதில் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு தொகுத்து வழங்கினார்.

தற்பொழுது கமல்ஹாசன் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் என்ற திரைபடத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகின்றார்.இந்நிலையில் சிம்புவை வைத்து கமல் ஒரு படம் தயாரிப்பதாகவும் முடிவு செய்துள்ளார். இதில் சிம்பு நடிப்பதாகவும் ஒப்புக்கொண்டார்  என தகவல் வெளிவந்துள்ளது.இதனை தொடர்ந்து சிம்பு மற்றும் கமல்ஹாசன் ரசிகர்கள் அப்படத்திற்காக உற்சாக வரவேற்புடன் காத்திருக்கின்றனர்.

author avatar
Parthipan K