நடிகர் பிரபு தேவா நடிக்கும் அடுத்த திரைப்படம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!!

0
183
#image_title

நடிகர் பிரபு தேவா நடிக்கும் அடுத்த திரைப்படம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

பஹீரா திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் பிரபு தேவா அவர்கள் அடுத்ததாக நடிக்கும் திரைப்படம் பற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

சினிமா துறையில் நடன இயக்குநராக வாழ்க்கையை தொடங்கிய பிரபு தேவா அவர்கள் நடிகராகவும் இயக்குநராகவும் மாறி பாலிவுட் திரையுலகம் வரை சென்று வெற்றி பெற்றுள்ளார். சமீபகாலமாக நடிகர் பிரபுதேவா அவர்கள் திரைப்படங்களை இயக்குவதை விட்டுவிட்டு திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

நடிகர் பிரபுதேவா அடுத்து நடிக்க இருக்கும் திரைப்படத்தை பற்றி படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நடிகர் பிரபு தேவா அவர்கள் அடுத்ததாக இயக்குநர் எஸ்.ஜே சீனு இயக்கும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குநர் எஸ்.ஜே சீனு மற்றும் நடிகர் பிரபுதேவா இணையும் இந்த படத்திற்கு ‘பேட்ட ராப்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார். பேட்ட ராப் திரைப்படத்தின் அறிவிப்பு குறித்து போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.