மாணவிகளிடம் நிர்வாணமாக சில்மிஷம் செய்த கும்கி பட நடிகர்! ரீல் மட்டுமல்ல ரியலிலும் இவர் வில்லன் தான்!

0
145
Actor of Kumki who flirted with students naked! He is a villain not only in reel but also in reality!
Actor of Kumki who flirted with students naked! He is a villain not only in reel but also in reality!

மாணவிகளிடம் நிர்வாணமாக சில்மிஷம் செய்த கும்கி பட நடிகர்! ரீல் மட்டுமல்ல ரியலிலும் இவர் வில்லன் தான்!

ஸ்ரீஜித் ரவி என்பவர் மலையாள திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்குள் வந்தார். பின் தமிழ் திரையுலகில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த கும்கி திரைப்படத்தில் அறிமுகமானார். இவர் பெரும்பான்மையாக வில்லன் கதாபாத்திரங்களில் நடிப்பவர் ஆவார். தமிழ் திரைப்படங்களை விட மலையாள திரைப்படங்களில் இவர் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார். தமிழில் மதயானை கூட்டம் என்ற படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இவர் ரீலில் மட்டுமல்ல ரியலிலும் வில்லன் போல தான் நடந்துள்ளார். இவர் சில தினங்களுக்கு முன்பு திருச்சூர் சென்றுள்ளார்.

அப்பொழுது அவ்வழியே வந்த சில மாணவிகள் முன் தனது காரை நிறுத்தி பேசியுள்ளார். அவ்வாறு பேசிக் கொண்டிருந்த நிலையில் அந்த மாணவிகளின் முன் தனது ஆடையை கழற்றி நிர்வாணமான முறையில் கீழ்தனமாக நடந்து கொண்டுள்ளார். இவ்வாறு மாணவிகளிடம் நடந்து கொண்டதை அவ்வழியே சென்ற ஒருவர் பார்த்து அந்த மாணவிகளின் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். இவர் அவ்வாறு கீழ்த்தனமாக நடந்து கொண்டது மட்டுமின்றி அந்த மாணவிகளின் வீடு வரைக்கும் சென்றுள்ளார்.

இதனை அனைத்தையும் அறிந்த பெற்றோர்கள் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் போலீசார் அவ்வழியே உள்ள அனைத்து கண்காணிப்பு கேமராவையும் ஆய்வு செய்துள்ளனர். அப்போது இந்த மாணவிகளிடம் சில்மிஷம் செய்தது வில்லன் நடிகர் ஸ்ரீஜித் ரவி என்பது தெரியவந்தது. அவருடைய கார் தான் அந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

மேலும் விசாரணையில் ஸ்ரீஜித் கூறியது, தனக்கு சிறிது காலமாக மனநலம் சரியில்லாததாகவும் அதற்கு மருந்து உட்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதை பெரிதும் பொறுட்படுத்தாத போலீசார் அவரை கைது செய்து தற்போது சிறையில் அடைத்துள்ளனர். இதே போல 2016 ஆம் ஆண்டு பள்ளி மாணவிகள் நடந்து செல்லும் பொழுது நிர்வாணமாக கீழ்தனமான முறையில் நடந்து கொண்டதாக ஸ்ரீஜித் மீது ஒரு வழக்கு தொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.