விஜய்க்கு வில்லனாக நடிக்கிறேனா?… மறுத்த மலையாள ஹீரோ!

0
80

விஜய்க்கு வில்லனாக நடிக்கிறேனா?… மறுத்த மலையாள ஹீரோ!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தை தற்போது தளபதி 67 படம் என்று அழைக்கப்பட்டு வருகிறது.

விஜய் வாரிசு படத்தை முடித்த பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித் தயாரிக்க, அனிருத் இசையமைப்பார் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே இவர்கள் இருவரும் மாஸ்டர் என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்துள்ளனர்.

இந்த படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே வாரிசு படத்தை விட அதிகமாக இந்த படத்தை ரசிகர்கள் எதிர்பார்க்க ஆரம்பித்தனர்.இந்த படத்தை பேன் இந்தியா ரிலீஸாக கொண்டு செல்ல சஞ்சய் தத், இயக்குனர் மிஷ்கின் மற்றும் கௌதம் மேனன் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

மேலும் பிருத்விராஜ், விஷால் ஆகியோரும் முக்கிய வில்லன் வேடங்களில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அந்த லிஸ்ட்டில் இப்போது மலையாள நடிகரான நிவின் பாலி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த தகவலை நிவின் பாலி தரப்பு முற்றிலும் மறுத்துள்ளது.

மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் நிவின் பாலி, தமிழிலும் நேரம், பிரேமம் மற்றும் ரிச்சி ஆகிய படங்களின் மூலம் கவனம் பெற்றுள்ளார். இப்போது இயக்குனர் ராம் இயக்கத்தில் ஏழு மலை ஏழு கடல் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகும் எனக் கூறப்படுகிறது.