கமல் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட முக்கிய நபர்!

0
75

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் போடப்பட்ட ஓட்டுகள் நேற்று முன்தினம் எனப்பட்டது. இதில் திமுக மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது ஆளும் கட்சியாக இருந்த அதிமுக பலம்வாய்ந்த எதிர்க்கட்சியாக சட்ட சபையில் அமர இருக்கிறது.

இந்தத் தேர்தலில் கோவை மாவட்டம் தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன் போட்டியிட்டார். அவர் தலைமையில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, அதேபோல இந்திய ஜனநாயக கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்த நிலையில், கோவை தெற்கு தொகுதியில் அதிமுக கூட்டணியில் பிஜேபியை எதிர்த்து போட்டியிட்ட கமல்ஹாசன் இறுதிவரையில் முன்னிலை வகித்தார். ஆனால் இறுதியில் பாஜகவின் வானதி ஸ்ரீனிவாசன் இடம் தோல்வியை தழுவினார்.

இதற்கிடையே மக்கள் நீதி மையம் கட்சியில் இருந்து நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர் நீக்கப்பட்டார். அடிப்படை உறுப்பினர் போன்ற அனைத்து பொறுப்பில் இருந்தும் அவர் விடுவிக்கப்பட்டார் என்று பொதுச்செயலாளர் சந்தோஷ் பாபு அறிவித்திருந்தார். சென்னை மண்டல மாநில செயலாளர் பதவியில் இருந்து அவர் விலகிய நிலையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்.

அவர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்புதான் அவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். நடிகர் சங்கத் தேர்தலில் சரத் குமார் அவர்களுக்கும் இடையில் பிறந்த பிரச்சனைதான் கமீலா கட்சியில் இருந்து விலகியதற்கு காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், சமீபத்தில் மக்கள் நீதி மையம் கட்சியில் இருந்து விலகிய அவர் கட்சியில் இருந்து விலகினாலும் அரசியலை விட்டு விலக வில்லை என்று தகவல் கிடைத்திருக்கிறது. இந்த சூழ்நிலையில், நேற்று திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார் கமீலா நாசர் .அவர் விரைவில் திமுகவில் இணைவதற்கான வாய்ப்பு இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.