“தளபதி 67-ல் எனக்கு வாய்ப்பில்லை என்று சொல்லிவிட்டார்…” இயக்குனர் லோகேஷை ஜாலியாக கலாய்த்த நடிகர்!

0
124

“தளபதி 67-ல் எனக்கு வாய்ப்பில்லை என்று சொல்லிவிட்டார்…” இயக்குனர் லோகேஷை ஜாலியாக கலாய்த்த நடிகர்!

இயக்குனர் லோகேஷ் விக்ரம் படத்துக்குப் பிறகு விஜய் இயக்கும் தளபதி 67 படத்தை இயக்க உள்ளார்.

சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதையடுத்து அவர் வம்சி இயக்கும் புதிய படமான வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் தளபதி 67 என்ற திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.  இந்த படத்தை மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித் தயாரிக்க, அனிருத் இசையமைப்பார் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே இவர்கள் இருவரும் மாஸ்டர் என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்துள்ளனர். சமீபத்தில் லோகேஷ் இயக்கிய விக்ரம் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாக அமைந்தது.

இந்நிலையில் லோகேஷ் தற்போது விஜய் படத்தின் திரைக்கதை வேலைகளில் பிஸியாக உள்ளதாக சொல்லப்படுகிறது. கதைப்படி படத்தில் 6 வில்லன்கள் கதாபாத்திரங்கள் இடம்பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. அதில் பிருத்விராஜ், சஞ்சய் தத், அர்ஜுன் ஆகியோர் நடிக்க வாய்ப்புள்ளதாக சொலல்ப்படுகிறது. அந்தவகையில் இப்போது மற்றொரு வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல இயக்குனர் கௌதம் மேனன் நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தைப் பற்றி தினமும் ஒரு அப்டேட்டாக வந்தவண்ணம் உள்ளது. பல நடிகர்களின் பெயர்கள் பரிசீலணையில் உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் இப்போது நடிகர் கலையரசன், இயக்குனர் லோகேஷுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து “நான் தளபதி 67ல் இல்லை என்று சொல்லிவிட்டார்” எனப் பதிவிட்டுள்ளார்.