கொரோனா பாதிப்பு: 10 லட்சம் கொடுத்து உதவிய பிரபல நடிகர்! எதற்காக தெரியுமா.?

0
75

கொரோனா பாதிப்பு: 10 லட்சம் கொடுத்து உதவிய பிரபல நடிகர்! எதற்காக தெரியுமா.?

கொரோனாவால் சினிமா படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்ட காரணத்தால், அந்த துறை சார்ந்த பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்காக நடிகர் சிவகார்த்திகேயன் 10 லட்சம் நிதி உதவி செய்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா அச்சத்தின் பிடியில் பல்வேறு துறைசார்ந்த பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கடந்த 19 ஆம் தேதி முதல் சினிமா படப்பிடிப்பு நிகழ்வுகளும் கொரோனா பாதிப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெஃப்சி மூலம் பணிபுரியும் 25,000 உறுப்பினர்களில் தினமும் பத்தாயிரம் பேர் பாதிக்கப்படுவதாக பெஃப்சி சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில், திரைப்படத் துறையில் நல்லநிலையில் இருக்கும் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் போன்றோர் இந்த இக்கட்டான சூழலில் உதவி புரியுமாறு தனது அறிக்கையில் கூறியிருந்தார்.

இதுகுறித்து ஆர்.கே.செல்வமணி அறிக்கையில் கூறியிருப்பதாவது;
இந்த திடீர் வேலை நிறுத்த காரணத்தால்
15 ஆயிரம் பெஃப்சி ஊழியர்களின் ஒரு குடும்பத்திற்கு ஒரு மூட்டை அரிசி தந்தால் அவர்கள் கஞ்சியை குடித்தாவது உயிர்வாழ முடியும். 10 ஆயிரம் உறுப்பினர்களுக்கு ஒரு மூட்டை சுமாரான அரிசி தருவதாக இருந்தால், ஒரு மூட்டை அரிசி ரூ.1250 என்று கணக்கு வைத்தால் மொத்தம் ரூ.2 கோடி ஆகிறது.

கருணை உள்ளம் கொண்ட நீங்கள் தயவு கூர்ந்து உங்களோடு பணிபுரிந்து உங்களோடு வாழ்ந்துவரும் பல்வேறு குடும்பங்களுக்கு உதவி புரிவீர், அவர்களுக்கு வாழ்வு அளிப்பீர் என்று கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் பெஃப்சி உறுப்பினர்களுக்கு உதவும் விதமாக 10 லட்சம் நிதியுதவி செய்துள்ளார். இதற்கு முன்னர் நடிகர் சிவக்குமார் குடும்பமும் 10 லட்சம் நிதியுதவி அளித்திருந்து குறிப்பிடத்தக்கது.

author avatar
Jayachandiran