சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் அஜித் நடிக்கும் புதிய படம்! சம்பள விஷயத்தில் சமரசம்!!

0
226
#image_title
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் அஜித் நடிக்கும் புதிய படம்! சம்பள விஷயத்தில் சமரசமா? 
தமிழ் திரைப்பட வரலாற்றில் சில  நடிகர் நடிகைகள் மட்டுமே என்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்க கூடியவர்களாக உள்ளனர். அந்த வரிசையில் எம்ஜிஆர் சிவாஜி, ரஜினி கமல், அஜித் விஜய், இந்த நடிகர்களுக்கு பிறகு யாரும் சொல்லி கொள்ளும் அளவிற்கு மக்கள் மனதில் நிரந்தர இடம் பிடிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
தற்போது உள்ள தமிழ் சினிமாவில் இளைய தலைமுறை நடிகர்கள் சிலர் இருந்தாலும் ரசிகர்கள் அதிகம் விரும்புவது தல என்று செல்லமாக அழைக்கப்படும் அஜீத்குமார் மற்றும் தளபதி என்று அழைக்கப்படும் விஜய் ஆகியோரின் திரைப்படங்களே இன்றும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடக்கூடியவையாகும்.
இவர்கள் இருவரும் தங்களது திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் ஒரு படத்திலாவது நடிக்க மாட்டார்களா? என ஏங்கும் எத்தனையோ தயாரிப்பு நிறுவனங்கள் உண்டு. அந்த வகையில் தமிழ் திரை உலகில் பல புதுமைகளை புகுத்திய சன் பிக்சர்ஸ் நிறுவனம் நடிகர் விஜய்யை வைத்து பல திரைப்படங்கள் தயாரித்து வெளியிட்டிருந்தாலும், நடிகர் அஜித்குமாரை வைத்து இது வரை திரைப்படங்கள் தயாரிக்காமல் போனது அவர்களுக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் வருத்தமாக தான் இருந்துள்ளது.
நடிகர் அஜித்குமார் ரசிகர்களின் எண்ணத்தை பூர்த்தி செய்யும் விதமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அஜித்தின் ஆஸ்தான இயக்குனரான சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு மாபெரும் பொருட்செலவில் புதிய படம் ஒன்றை தயாரிக்க உள்ளனர். இந்த படத்திற்காக நடிகர் அஜித்திடம் பெரும் தொகை ஒன்று சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக சினிமா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சன் பிக்சர்ஸ் உடன் எப்போதுமே படம் பண்ண விரும்பமாட்டார் அஜித். காரணம் அவர்கள் போடும் கண்டிஷன் தான். படத்தின் அறிமுக நிகழ்ச்சி, பாடல் வெளியீடு, சன் தொலைக்காட்சிக்கு தனி பேட்டி தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல கண்டிஷன்கள் விதிப்பது தான் காரணம் என கூறப்படுகிறது.
இது ஒரு புறம் இருந்தாலும், தற்போது சன் பிக்சர்ஸ் அஜித்தை வைத்து தயாரிக்க போகும் திரைப்படத்திற்கான சம்பளம் மற்றும் கண்டிஷன்கள் ஆகியவற்றில் அஜித்துடன் சமரசம் செய்துள்ளதாகவும், படத்திற்கான சம்பள தொகையில் முன்பணமாக சில கோடிகளையும், மீதியை மாதம் முதல் தேதியில் ஐந்து கோடியாக பிரித்து பெற்று கொள்ள சமரசம் செய்துள்ளதாக சினிமா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சமரசத்துக்கான முயற்சியை இயக்குனர் சிறுத்தை சிவா செய்துள்ளதாகவும், விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் எனவும், வீரம், விஸ்வாசம், போன்ற வெற்றி பட வரிசையில் சன் பிக்சர்ஸ் அஜித்தை வைத்து தயாரிக்க போகும் இந்த திரைப்படமும் மாபெரும் வெற்றி திரைப்படமாக அமையும் என அவரது ரசிகர்கள் எதிர் பார்த்து வருகின்றனர்.
author avatar
Savitha