Breaking News
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நடிகர் அஜித் வாழ்த்து

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நடிகர் அஜித் வாழ்த்து
அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவிக்காக எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர் செல்வம் இடையே நடைபெற்ற யுத்தத்தில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார், இந்த வெற்றியால் அதிமுகவில் ஏழாவது பொது செயலாளராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டார் . அதிமுகவின் உச்சபட்ச அதிகாரமிக்க பதவியில் எடப்பாடி அமர்ந்ததும் தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
எடப்பாடி அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது பாஜகவின் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக சில அரசியல் கட்சிகள் மற்றும் பல முக்கிய பிரபலங்கள் கூறிவரும் நிலையில், பிரபல தமிழ் திரைப்பட நடிகர் அஜித்குமார் நேற்று தொலைபேசி வாயிலாக தனது வாழ்த்துக்களை எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்து கொண்டார்.
நடிகர் அஜித்குமாரின் தந்தை கடந்த வாரம் மரணமடைந்தார், அன்றைய தினம் அதிமுகவின் இடைக்கால பொது செயலாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி தன்னுடைய இரங்கல் செய்தியை நடிகர் அஜித்குமாருக்கு தெரிவித்தார், அதிமுக மீது எப்போதும் தனிப்பட்ட முறையில் மரியாதை வைத்திருக்கும் நடிகர் அஜித்குமார், தற்போது அதிமுகவின் பொதுச் செயலாளராக பதவி ஏற்றுள்ள எடப்பாடிக்கு தனிப்பட்ட முறையில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
நடிகர் அஜித்குமாரின் இந்த வாழ்த்து செய்தியானது தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசும் பொருளாக உள்ளது, என்னென்றால் நடிகர் அஜித்குமாருக்கும் அதிமுகவிற்கும் எப்போதும் நெருங்கிய தொடர்பு உள்ளது அறிந்த ஒன்றுதான். அவரின் திருமணத்தின் போது ஜெயலலிதா அவர்கள் அனைவர் முன்பும் கட்சிக்கு வந்துவிடுங்கள் ஒரு பெரிய பொறுப்பு காத்திருக்கிறது என கூறும்போது, அஜித் தனக்கே உரிய பாணியில் வேண்டாம் மேடம் என்னை விட்டுவிடுங்கள் நான் நானாகவே இருக்கிறேன் என பெருந்தன்மையுடன் கூறியது குறிப்பிடத்தக்கது.