ஊழல் வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சருக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!

0
87
Order to remove roadside statues! High Court Next Action!
Order to remove roadside statues! High Court Next Action!

ஊழல் வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சருக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!

பத்தாண்டுகள் கழித்து இம்முறை நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றது.தற்பொழுது 4 மாதங்களைக் கடந்து ஆட்சியை நடத்தி வருகிறது.பலர் நல்ல முறையில் ஆட்சி நடத்துவதாக தொடர்ந்து ஸ்டாலினிடம் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் தங்கள் ஆட்சிக்கு வந்தால் முன்புள்ள ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை வெளிக்கொண்டு வருவதாக கூறினர். அதேபோல இவர்கள் ஆட்சி அமைத்ததும் முன்னாள் திமுக அமைச்சர்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி கணக்கில் வராத பலவற்றை மக்கள் முன்னிலையில் கொண்டு வந்தனர்.

இந்நிலையில் 1991 முதல் 96 வரை இந்திர குமாரி அதிமுகவில் அமைச்சராக இருந்தார். அதனையடுத்து திமுக கட்சியில் சேர்ந்தார்.இவர் அதிமுக காட்சியின்போது அமைச்சராக இருந்த நிலையில் ,இவரது கணவர் பாபு என்பவர் மாற்றுத்திறனாளிகளுக்காக பள்ளி நடத்துவதாக கூறி அரசிடம் 11.45 லட்சம் முறைகேடாக பெற்றுள்ளார் என்று இவர் மீது வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கானது சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது.பல ஆண்டுகள் கழித்து இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி ,அவரது கணவர் பாபு மற்றும் சண்முகம் என்பவர் ஆகியோர் இந்த வழக்கில் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இவர்களை தவிர்த்து இந்த வழக்கில் மேலும் இரு நபர்கள் அதாவது கிருபாகரன் ,வெங்கட கிருஷ்ணன் என்பவர் சம்பந்தப்பட்டனர். இதில் ஒரு நபரான கிருபாகரன் இறந்து விட்ட நிலையிலும் மற்றொரு நபர் வெங்கட் கிருஷ்ணன் விடுவிக்கப்பட்டுள்ளார். அதனால் இந்திரகுமாரி அவரது கணவர் மற்றும் சண்முகம் ஆகியோருக்கு மட்டும் நீதிமன்றம் தண்டனையை விதித்துள்ளது. அவர்களுக்கான தண்டனை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. தற்போது இவர் திமுகவில் இருந்து வருவதால் இவரது தண்டனை காலத்தில் ஏதேனும் குளறுபடிகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் பேசி வருகின்றனர்.