உயர்த்து வரும் வெங்காயத்தின் விலையை குறைக்க தமிழக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை…! நிம்மதியடைந்த மக்கள்…!

0
68

 

பண்ணை பசுமை கடைகளில் இன்று முதல் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 45 ரூபாய்க்கு கிடைக்கும்.

தமிழ்நாட்டில் வெங்காய விலை உயர்வது என்பது எப்பொழுதும் நடக்கும் ஒரு நிகழ்வு தான். சென்ற 10 வருடங்களில் வெங்காயத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது அதன் ஒரு பகுதியாக அண்டை மாநிலங்களில் இருந்து வெங்காயத்தை அந்த வகையில் இந்த வருடமும் வெங்காயத்தின் விளைச்சல் அதிகமாக இருக்கின்ற கர்நாடகா ஆந்திரா மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்வதற்கான நடைமுறைகளை தமிழக அரசு முன்னெடுத்த வேளையில், மழை காரணமாக அந்த பகுதிகளில் வெங்காய விளைச்சல் மந்தமாகி, இப்போது கொள்முதல் விலை அதிகமாக இருக்கின்றது.

இதன் காரணமாக வெங்காயத்தின் இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து மாநகராட்சி பகுதிகளிலும் நடந்து வரும் பசுமை பண்ணை நுகர்வோர் கடைகளிலும் மற்றும் நகரும் கடைகளிலும் வெங்காயம் கிலோ ஒன்றிற்கு ரூபாய் 45 என்று இன்று முதல் விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

வெங்காயத்தின் விலை உயர்வை தமிழக அரசு அணை தினமும் கண்காணித்து வருகின்றது இந்த நிலையில் நேற்றைய வெங்காயத்தின் விலை கிலோ ஒன்றிற்கு ரூபாய் 110 என்று விற்பனை ஆனது எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக இந்த முடிவை தமிழக அரசு எடுத்துள்ளதாக தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்திருக்கிறார். ஆகவே இன்று முதல் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூபாய் 45 என்று கிடைக்கும் என்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.