மாநில அரசுகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு! மீண்டும் ஊரடங்கு அமல்?

0
86

மாநில அரசுகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு! மீண்டும் ஊரடங்கு அமல்?

கொரோனா இரண்டு மூன்று என்ற அலைகளை கடந்து தற்பொழுதுதான் அனைத்து நாடுகளிலும் இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ள நிலையில் மீண்டும் சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பானது அடுத்த கட்டத்தை அடைந்து அதிகரித்துள்ளது.

தற்பொழுது அமெரிக்கா பெல்ஜியம் ஜெர்மனி சீனா என அனைத்து நாடுகளிலும் தாக்கம் அதிகரித்து வரும் வேலையில் இந்தியாவிலும் குஜராத் ஒடிசா மாநிலங்களில் இந்த ஒமைக்ரான் தொற்றால் மீண்டும் ஒரு சிலர் பாதிப்படைந்துள்ளனர்.

இந்த உருமாறிய வைரஸ் ஆனது மீண்டும் பல நாடுகளை தாக்கி பழைய நிலைக்கு கொண்டடைய செல்லும் என்ற அச்சத்தால் பல நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

அந்த வகையில் இந்தியாவும் உருமாறிய பிஎஃப் 7 வைரஸ் பரவாமல் இருக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் வெளிநாடுகளில் இருந்து அதாவது சீனா ஜப்பான் தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் நபர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

தற்பொழுது ஓடிஸா குஜராத் என்று ஒரு சிலர் பாதிக்கப்பட்ட நிலையில் நாளடைவில் பல மாநிலங்களின் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் அனைத்து மாநிலங்களும் கட்டாயம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் கயிருப்பில் வைத்திருப்பது அவசியம் என்று கூறியுள்ளது. அதுமட்டுமின்றி அந்தந்த மாநிலத்திற்கு ஏற்ப கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

எனவே மாநிலங்களில் தொற்றுப் பாரவல் அதிகரிக்கும் ஆயின் கட்டாயம் ஊரடங்கு போடப்படும் நிலைக்கு தள்ளப்படுவோம் அதனால் மக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இருப்பது அவசியம் என்று தெரிவித்துள்ளனர்.