அப்பாடா என பெருமூச்சு விடுவதற்குள் அடுத்த தீர்ப்பால் கதிகலங்கிய மாஜி அமைச்சர்! ஐகோர்ட்டின் அதிரடி உத்தரவு! 

0
140
Action order of the court!
Action order of the court!

அப்பாடா என பெருமூச்சு விடுவதற்குள் அடுத்த தீர்ப்பால் கதிகலங்கிய மாஜி அமைச்சர்! ஐகோர்ட்டின் அதிரடி உத்தரவு!

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் புகாரின் பேரில்  சோதனை மேற்கொண்டது. அந்த வகையில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வருமானத்திற்கு அதிகமான சொத்துக்கள் வைத்திருப்பதால் அவர் மீது சொத்து குவிப்பு வழக்கப் போடப்பட்டது. மேலும் டெண்டரில் முறைகேடு நடந்ததாகவும் அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு குறித்த விசாரணையானது இன்று நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்னிலையில் அமர்வுக்கு வந்தது.

இந்த வழக்கு அமர்வுக்கு வருவதற்கு முன்பாகவே வேலுமணி, அவர் மீது உள்ள டெண்டர் முறைகேடு வழக்கு மற்றும் சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்யும்படி மனு அளித்திருந்தார். இன்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், வேலுமணி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆளும் கட்சியின் உள்நோக்கத்துடன் தான் தற்பொழுது முன்னாள் அமைச்சர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. குறிப்பாக டெண்டர் அனைவரின் முன்னிலையில் நடத்தப்பட்டது. அவ்வாறு இருக்கும் பொழுது முன்னாள் அமைச்சர் வேலுமணி  எப்படி சம்பந்தப்பட்டிருக்க முடியும்.

எனவே டெண்டர் தொடர்பாக போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதற்கு அடுத்தபடியாக தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜரானார்.அவர், அரசின் எந்த ஒரு உள்நோக்கத்துடனும் வழக்கு போடவில்லை. மத்திய தணிக்கை துறை அறிக்கை அடிப்படையில்தான் வழக்கு போடப்பட்டுள்ளது. எனவே அதன் அடிப்படையில் தான் விசாரணையும் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

அதேபோல டெண்டர் முறையானது ஐ பி முகவரியில் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு விண்ணப்பம் செய்யப்பட்டதில் இவர்களது உறவினர்கள் நண்பர்கள் தான் உள்ளனர் என்றும் தெரிவித்தார். நீதிபதிகள் இரு தரப்பு வாதத்தையும் கேட்டு, எஸ் பி வேலுமணி மீது உள்ள டெண்டர் வழக்கை ரத்து உத்தரவிட்டனர்.ஆனால் சொத்துக் குவிப்பு வழக்கை ரத்து செய்ய முடியாது என தீர்ப்பு வழங்கினர்.