தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு!

0
85
  1. தமிழகத்தில் 100 சதவீத இருக்கைகள் உடன் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்கலாம் என்று நேற்றைய தினம் தமிழக அரசு உத்தரவிட்டு இருக்கின்றது.

    கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருந்து வந்த நிலையில் பேருந்து சேவையை முழுமையாக நிறுத்தப்பட்டது அதன்பிறகு படிப்படியாக தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு கடந்த செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் மாவட்டத்திற்கு உள்ளாக பேருந்து சேவையை அனுமதித்தது.

    அந்த சமயத்தில் 50 சதவீத பயணிகளுடன் பேருந்துகள் இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் 100% பயணிகளுடன் பேருந்து இயக்க அனுமதி வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இதனைத் தொடர்ந்து 60 சதவீத பயணிகளுடன் பேருந்துகள் இயங்கலாம் என்று அரசு சார்பில் அறிவிப்பு வெளியானது ஆனால் இப்போது தொழிற்சாலைகள் பள்ளி கல்லூரிகள் என்று அனைத்தும் செயல்படத் தொடங்கி இருக்கின்ற காரணத்தால் பேருந்துகளில் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆகியோரின் கூட்டம் அதிகரிக்கும் காரணத்தால் 100 சதவீத பயணிகளுடன் பேருந்துகள் இயங்க அனுமதி வழங்க வேண்டும் என்று தனியார் பேருந்துகளின் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இந்த சூழ்நிலையில் நேற்று தமிழக அரசு வெளியிட்டு இருக்கின்ற ஒரு அறிவிப்பில் அரசு மற்றும் தனியார் ஒப்பந்த பேருந்துகள் உட்பட அனைத்து பேருந்துகளும் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.

    அதே சமயத்தில் பேருந்துகளில் முறையான வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டு இருக்கிறது தமிழக அரசு.