58.23 கோடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்பு! வசமாக சிக்கிய முன்னாள் அமைச்சர்!

0
68

திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த புதிதில் எதிர்க்கட்சித் தலைவரான திரு எடப்பாடி பழனிச்சாமியை கண்டு சற்றே மிரண்டு போனது என்றுதான் சொல்லவேண்டும்.
ஒருவேளை இவர் எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் சட்டசபையில் இவர் கேட்கும் கேள்விகளுக்கு நம்மால் பதில் சொல்வது கடினமாயிற்றே என்பதால் திமுக கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானது.

அதோடு பன்னீர்செல்வம் அவர்களை எதிர்க்கட்சித் தலைவராக ஆதரவு தெரிவித்தது திமுக அரசு.அதோடு திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையை கொண்டு சோதனை நடத்தி அவர்கள் மீது வீண் பழி சுமத்துகிறது என்று பலரும் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி தங்கமணி வரையில் அடுக்கடுக்காக அடுத்தடுத்து முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு சோதனை மேற்கொண்டு வந்தது தமிழக அரசு.ஆனால் அதிமுக தரப்பில் இதற்கு எதிராக கடுமையான கண்டனங்கள் பதிவு செய்யப்பட்டனர்.

அந்தவிதத்தில் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் 2016 முதல் 2021 ஆம் ஆண்டு வரை நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சராக பதவி வகித்தவர் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி.

இவர் கடந்த 2016 முதல் 2011ஆம் ஆண்டு வரையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது
இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறையின் உத்தரவின்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் கடந்த ஆகஸ்ட் மாதம் எஸ் பி வேலுமணிஉள்ளிட்ட   குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளில் சோதனை நடத்தினர் இதனடிப்படையில் வேலுமணியின் வீடு உட்பட 60 தொகுதிகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்தார்கள்.

சோதனையின் முடிவில் 13,8,500 ரூபாய் ரொக்கம் நில பதிவு சம்பந்தமான ஆவணங்கள் தனியார் நிறுவனங்களுடன் ஆன பரிவர்த்தனை ஆவணங்கள் 2 கோடி ரூபாய் அளவுக்கு வைப்புத்தொகை மாநகராட்சி தொடர்புடைய அலுவல் பூர்வமான ஆவணங்கள் ஹார்ட் டிஸ்க்குகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை அடுத்து கோயம்புத்தூரில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று அதிகாலை முதல் மறுபடியும் சோதனையை நடத்தி வருகிறார்கள் இந்த சூழ்நிலையில், எஸ் பி வேலுமணி மற்றும் அவருடைய சகோதரர் அன்பரசன் அவருடைய மனைவி ஹேமலதா போன்ற 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது அதோடு வேலுமணி உடன் 15 ஊழல் செய்ததாக 6 நிறுவனங்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்தபடியாக வேலுமணியின் உதவியாளர் சந்தோஷ்குமார் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை செய்துவருகின்றது அதைப்போல கோயம்புத்தூர் சிங்காநல்லூர் சட்டசபை உறுப்பினர் ஜெயராமன் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

அதோடு கோயம்புத்தூர், சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் எஸ் பி வேலுமணி தொடர்புடைய இன்னும் பல நபர்களின் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. கோயம்புத்தூரில் 41 இடங்கள் சென்னையில்3 இடங்கள் சேலத்தில் 4 இடங்கள் என்று ஒட்டுமொத்தமாக 50 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை அதிகாலை முதலே நடைபெற்று வருவதாக தெரிகிறது.

இம்முறை அவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு செய்திருப்பதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது அவருடன் இணைந்து 13 பேர் மீதும் இதே வழக்கை பதிவு செய்திருக்கிறது. லஞ்ச ஒழிப்புத் துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் சுமார் 58.23 கோடி வருமானத்தைவிட அதிகமாக சொத்து சேர்த்ததாக இந்த வழக்கு அவர் மீது பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

மேலும் இதே போல அவருடைய குடும்பத்தை சார்ந்தவர்கள் மீதும் தொடரப்பட்டுள்ளதாக தெரிகிறது. தேர்தல் சமயத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தாக்கல் செய்திருந்த சொத்துக்களினடிப்படையில் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

முதல் தகவலறிக்கையின் படி கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி முதல் கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் தேதி வரை உள்ள காலகட்டத்தில் மட்டும் வருமானத்தைவிட 58.23 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த வழக்கினடிப்படையில், அவருக்கு தொடர்புடைய 58 பகுதிகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை இன்று காலை முதல் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.