சிம்பு பட நாயகிக்கு குவியும் லைக்குகள்! சிம்புவின் ரசிகர்கள் கொடுத்த கிப்ட் இதுதானாம்!

0
78

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிம்பு. இவர் மாநாடு படத்தைத் தொடர்ந்து தற்போது சுசீந்திரன் இயக்கிவரும் பெயரிடப்படாத ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இந்த படத்தின் கதாநாயகியாக நடிகை நிதி அகர்வால் மாஸ் காட்டி வருகிறார்.

இவ்வாறு இருக்க தற்போது நிதி அகர்வால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி சிம்பு வரிகள் சிம்புவின் ரசிகர்கள் இடையே அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

அதாவது ஜெயம் ரவி நடித்து வெளியாக உள்ள படம் ‘பூமி’. இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் தான் நிதி அகர்வால்.

இந்நிலையில் மதுரையில் கோவில் அருகில் நடிகை நிதி அகர்வால் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நிதி.

மேலும் இந்த புகைப்படத்திற்கு சிம்புவின் ரசிகர்கள் பலரும் லைக்குகளை  குவித்து வருகின்றனர். சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் மதுரையில் படமாக்கப்பட்டு கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K