சூரிய வழிபாட்டின் தகவலும் அதனால் கிடைக்கும் நன்மைகளும்..!!

0
234

சூரிய வழிபாட்டின் தகவலும் அதனால் கிடைக்கும் நன்மைகளும்..!!

விடியற்காலை நீராடலை முடித்துவிட்டு காலைக் கதிரவனை வழிபடுவது தமிழரின் பாரம்பரிய வழிபாட்டு முறையில் ஒன்றாகும். இயற்கையின் வழிபாட்டில் முதல் மற்றும் முக்கிய வழிபாடு சூரிய வழிபாடாகும். இதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை காண்போம்.

சூரிய வழிபாட்டின் தகவல் & நன்மைகள் :

  • சுகத்திற்கு சூரிய பகவானை வணங்கு என்று சொல்லும் வழக்கம் இன்னமும் உண்டு. சூரிய வழிபாடு செய்வதினால் மனம் அமைதி பெற்று அகம் தூய்மையாகிறது.
  • தமிழ்நாட்டில் விமரிசையாக நடைபெறும் தைப் பொங்கலில் கூட சூரியனுக்கு நன்றி செலுத்தும் விதமாக வழிபாடு செய்யப்படுவது வரலாற்று உண்மையில் ஒன்றாகும்.
  • காலை நேரம் 6ல் இருந்து 7 மணிக்குள்ளாக, மாலை நேரம் 5ல் இருந்து 6 மணிக்குள்ளாக உடலில் நல்லெண்ணெய் தேய்த்து சூரிய வெளிச்சத்தில் அமர்ந்துவிட்டு பிறகு குளித்தால் நீண்ட நாட்களாக விலகாத நோய்களும் விலகிவிடும்.
  • குஜராத்தில் மொதோரா என்ற இடத்திலும், ஒரிசாவில் கோனார்க் என்ற இடத்திலும், ஆந்திராவில் அரசவல்லி என்ற இடத்திலும் மற்றும் கேரளா, காஷ்மீர் போன்ற இடங்களில் சூரியனுக்கு தனித்தனியாக கோயில்களே உள்ளன.
  • பூமியில் இருக்கும் அனைத்து உயிர்களின் கடவுளாக இருக்கும் பஞ்ச பூதங்களில் சூரிய பகவான் முதன்மையானவர்.
  • தினமும் ஓதப்படும் காயத்ரி மந்திரமும் சூரியனைப் போற்றும் மந்திரமே. இதனால் பலருக்கு நல்ல உடல் ஆரோக்கியமும், நல்ல அறிவுத் திறனும் பெருகுகிறது.
  • ஒவ்வொரு பருவ காலத்திலும் பல்வேறு வண்ணத்தில் சூரியன் காட்சித் தருவார். மழை காலத்தில் பளிர் வெண்மயாகவும், வெயில் காலத்தில் செம்மையான நிறத்திலும், பனிக் காலங்களிலும் செந்தாமரை மற்றும் சிவப்பு நிறத்திலும் காட்சி தருவார்.
  • சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் இன்றும் சூரிய வழிபாடு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இயற்கையின் வழிபாடு உலகம் முழுவதும் இருப்பதை இதன்மூலம் அறியலாம்.
  • தமிழ் இலக்கிய நூலான சிலப்பதிகாரத்தில் சூரியனை “உச்சிகிழான் கோட்டம்” என்றும் தொல்காப்பியத்தில் “கொடிநிலை” என்றும் அழைக்கப்படுகிறது.
  • சூரிய வழிபாட்டினால் கண் மற்றும் தோல் நோய்கள் விரைவில் நீங்குவதாக பாரசீகர்கள் நம்பினர். பாரசீகத்தின் குருக்கள் சூரிய வழிபாட்டின் முறையே மருத்துவ சிகிச்சையை அளித்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
  • நதிக்கரை ஓரம் வாழ்பவர்கள் தினசரி சூரிய பகவானை வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர் என்பதற்கு, நைல் நதிக்கரை சூரிய வழிபாடு உதாரணமாக உள்ளது.
  • எகிப்து, ஈரான் போன்ற நாடுகளில் பழங்கால சூரிய வழிபாடு குறித்த கல்வெட்டு ஆதாரங்களும், புராண தகவல்களும் சூரிய வழிபாட்டின் முறையை பறைசாற்றுகிறது.
author avatar
Jayachandiran