ஆவின் பால் பாக்கெட் கூடுதல் விலைக்கு விற்பனை!.அதிரடியாக களம் இறங்கிய அதிகாரிகள்!!..

0
118
Aavin milk packet is sold at an additional price!. Officials came into action!!..
Aavin milk packet is sold at an additional price!. Officials came into action!!..

ஆவின் பால் பாக்கெட் கூடுதல் விலைக்கு விற்பனை!.அதிரடியாக களம் இறங்கிய அதிகாரிகள்!!..

தமிழகத்தில் தொடர்ந்து ஆவின் பாலை கூடுதல் விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கலாம் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.ஆவின் நிறுவனம் வாயிலாக  விவசாயிகளிடம் இருந்து தினமும் 40 லட்சம் லிட்டர் வரை பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

இந்தப் பால்,கொழுப்பு மற்றும் புரத சத்து அடிப்படையில் மூன்று வகையாக தரம் பிரிக்கப்பட்டுள்ளது.அதில் ஆரஞ்ச், பச்சை, நீலநிற பாக்கெட்டுகளில் அடைத்து விநியோகிக்கப்படுகிறது.இதனை தொடர்ந்து சென்னையில் மட்டும் தினமும் 14 லட்சம் லிட்டர் பாலும்  மற்ற மாவட்டங்களில் 14 லட்சம் லிட்டர் பால் விற்பனையாகி வருகிறது.

ஆரஞ்ச் நிற பாக்கெட்டில் நிரப்பப்பட்ட 500 மி. லி. , ஆவின் பால் 24 ரூபாயும், பச்சை நிற பாக்கெட் 22 ரூபாயும், நீல நிற பாக்கெட் 20 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது .ஒரு பாக்கெட் பால் விற்பனை செய்வதன் வாயிலாக, டீலர்களுக்கும், பார்லர் உரிமையாளர்களுக்கும், ஒரு ரூபாய் கமிஷன் வழங்கப்படுகிறது.

தனியார் பால் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டு, 500 மி. லி.பால் பாக்கெட், 34 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தனியார் பால் விலை உயர்வால் ஆவின் பாலை நோக்கி பொதுமக்கள் அனைவரும் படையெடுத்து வாங்க துவங்கி உள்ளனர். ஹோட்டல்கள், கேன்டீன்கள், டீ கடைகள் மற்றும் பேக்கரிகள்ஆகியவற்றின் தேவைக்காக ஆவின் பால் அதிகம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

இதனால் ஆவின் பால் விற்பனை 50 ஆயிரம் லிட்டருக்கு மேல் அதிகரித்துள்ளது.கூடிய விரைவில் ஒரு லட்சம் லிட்டரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதனிடையே ஆவின் பாலை வாடிக்கையாளர்கள் மட்டும்மல்லாமல் அவர்களிடம் வாங்கி செல்லும் கடை உரிமையாளர்களும், ஒரு பாக்கெட்டிற்கு மூன்று முதல் ஐந்து ரூபாய் வரை கூடுதல் விலை வைத்து விற்கின்றனர்.

இதனால் தி.மு.க.அரசு லிட்டருக்கு மூன்று ரூபாய் விலை குறைப்பு செய்தும் அதன் பலனை எவரும் அனுபவிக்க முடியாத நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.ஆகையால் ஆவின் பாலை கூடுதல் விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான  நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனைதொடர்ந்து பால் விற்பனையை ஆவின் அதிகாரிகள் கண்காணிக்க ஆரம்பித்துள்ளனர்.இதனால் அதிக விலைக்கு பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யும் வணிகர்களுக்கு அவரது உரிமம் ரத்து செய்வதோடு அவர்களின் கடைக்கு சீல் வைக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.இதையும் மீறி செயல்பட்டால் கடை உரிமையாளர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கவும் வாய்புள்ளது என தெரிவித்திருந்தது.

author avatar
Parthipan K