Connect with us

Breaking News

திமுக ஆட்சியில் ஆவின் நிறுவனம் அழிவுப் பாதையை நோக்கி செல்கிறது – ஓ.பன்னீர் செல்வம்

Published

on

திமுக ஆட்சியில் ஆவின் நிறுவனம் அழிவுப் பாதையை நோக்கி செல்கிறது – ஓ.பன்னீர் செல்வம்

 

Advertisement

திமுக ஆட்சியில் நடக்கும் குளறுபடிகளால் ஆவின் நிறுவனம் அழிவுப் பாதையை நோக்கி செல்வதாக அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஒ பன்னீர் செல்வம் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

Advertisement

இது தொடர்பாக ஒ பன்னீர் செல்வம் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கடந்த இரண்டு ஆண்டுகளில் திமுக ஆட்சியில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் காரணமாக ஆவின் நிறுவனத்தில் பல குறுபடிகள் நிழ்ந்துள்ளது. இந்த குளறுபடிகள் காரணமாக ஆவின் நிறுவனம் அழிவுப் பாதையை நோக்கி செல்கிறது. நுகர்வோர் மற்றும் உற்பத்தியாளர்கள் இருவரும் திமுக ஆட்சியில் துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள்.

 

Advertisement

ஆவின் பால் மற்றும் ஆவின் பால் பொருட்கள் குறைந்த விலையில் மக்களுக்கு தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று பரிசீலித்து பால் கொள்முதல் விலையை உயர்த்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அழிவுப் பாதையில் சென்று கொண்டிருக்கும் ஆவின் நிறுவனத்தை மீட்டு ஆக்கப்பூர்வமான பாதைக்கு கொண்டு செல்ல முனைப்புடன் செயல்பட வேண்டும்” கூறியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement