உங்க மிரட்டலுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன்! கெத்தாக நிற்கும் மனீஷ் சிசோடியா!

0
73

தலைநகர் டெல்லியில் கலால் வரிவிதிப்பு முறை மாற்றியமைக்கப்பட்டதில் மிகப்பெரிய முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக புகார் எழுந்தது. இந்த புகாரையடுத்து டெல்லியின் துணை முதலமைச்சர் சிசோடியா தொடர்புடைய 31 இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமை சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது ஏராளமான ஆவணங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், மனிஷ் உட்பட 15 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்திருக்கிறது .இந்த வழக்கில் மனீஷ் சிசோடியா முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், குஜராத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த மணிஷ்சிசோடியா பாஜகவில் இணைந்தால் தன் மீதான அமலாக்கத்துறை, சிபிஐ, உள்ளிட்ட வழக்குகள் ரத்து செய்யப்படும் என்று பாஜகவிலிருந்து தகவல் வந்ததாக கூறியுள்ளார்.

கட்சியை விட்டு வெளியேறினால் சிபிஐ, இடி, வழக்குகள் திரும்ப பெறப்படும் எனவும், கட்சியை விட்டு வெளியேறும் போது அதனை உடைத்து விடுவதாகவும் எனக்கு குறுஞ்செய்தி வந்தது.

அதோடு அவர்களும் தனக்கு முதல்வர் பதவி கொடுப்பதாக உறுதியளித்தனர். நான் இங்கே முதல்வராக வரவில்லை நாடு முழுவதுமிருக்கின்ற மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்குவதற்காக வந்திருக்கிறேன். ராஜ்புட் வம்சத்தைச் சார்ந்த தான் தலையே போனாலும் ஊழலுக்கும், சதிக்கும் தலை வணங்க போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

உலகமே போற்றும் கல்வி முறையை அமல்படுத்தியிருக்கின்ற அனைத்து மனிஷ் சிசோடியாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆனாலும் அதற்கு மாறாக சிபிஐயை ஏவி விட்டு சோதனை நடத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

ஒட்டுமொத்த நாட்டின் கல்வித் திட்டத்தை மணி சிசோடியாவிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், அவர் தெரிவித்தார். மனிஷ் சிசோடியா கைது செய்யப்படலாம் என்று குறிப்பிட்டிருக்கின்ற டெல்லி முதல்வர் தானும் கைது செய்யப்படலாம் எனவும், இவை அனைத்தும் குஜராத் தேர்தலுக்காக செய்யப்படுவதாகவும், கூறினார்.

மணிஷ் சிசோடியாவின் குற்றச்சாட்டுக்கு நேரடியாக பதிலளிக்காத பாஜக அரவிந்த் கெஜ்ரிவால் யாரையெல்லாம் ஊழலற்றவர்கள் என தெரிவிக்கிறாரோ அவர்கள் அனைவரும் சிறைக்கு செல்வதாக கூறியுள்ளது.

இந்த நிலையில், மதுபான கொள்கை ஊழலில் தெலுங்கானா முதலமைச்சரின் மகள் கவிதாவுக்கும் தொடர்பிருப்பதாக தெரிவித்த பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர் பர்வேஷ் வர்மா மீது மான நஷ்ட வழக்கு தொடரவிருப்பதாக கவிதா தெரிவித்துள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள டெல்லி துணை முதலமைச்சரை பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி அந்த மாநில முதலமைச்சர் இல்லம் முன் பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.