ஆசியக்கோப்பை அணியில் அந்த வீரர் இல்லாதது மிகப்பெரிய இழப்பு… முன்னாள் வீரர் விமர்சனம்!

0
64

ஆசியக்கோப்பை அணியில் அந்த வீரர் இல்லாதது மிகப்பெரிய இழப்பு… முன்னாள் வீரர் விமர்சனம்!

ஆசியக்கோப்பை தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி இடம்பெறவில்லை.

சமீபத்தில் ஆசியக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இடம்பெறவில்லை. இது தற்போது விமர்சனங்களை உண்டாக்கியுள்ளது. சமீபகாலமாகவே அவர் டி 20 போட்டிகளில் தவிர்க்கப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் முன்னாள் வீரரும் தற்போதைய வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா முகமது ஷமி இல்லாதது மிகப்பெரிய இழப்பு எனக் கூறியுள்ளார். மேலும் அவர் “ஆசியக்கோப்பை தொடர் நடக்கும் ஐக்கிய அரபு அமீரக மைதானங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். நாம் வெறும் 3 வேகப்பந்து வீச்சாளர்களோடு செல்வது தவறான முடிவு. முகமது ஷமியின் அனுபவம் இந்திய அணிக்கு கூடுதல் பலத்தைக் கொடுத்திருக்கும்.” எனக் கூறியுள்ளார்.

ஷமி டி 20 போட்டிகளில் விளையாடுவது குறித்து சில தினங்களுக்கு முன்னர் பிசிசிஐ அதிகாரி ஒருவர் பேசியது கவனத்தில் கொள்ளத்தக்கது. பிசிசிஐ தேர்வாளர்கள் அவரை 50-ஓவர் வடிவத்திலும் சிவப்பு-பந்து கிரிக்கெட்டிலும் தொடர்ந்து பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். அதனால் அவர் இனிமேல் டி 20 போட்டிகளில் ஒரு வீரராக கருதமாட்டார் என்று சொல்லப்படுகிறது.

“ஷமி இன்னும் இளம் வீரர் இல்லை, டெஸ்ட் போட்டிகளுக்கு அவர் எங்களுக்குத் தேவை. அதனால் அவர் டி20 போட்டிகளில் பங்கேற்கவில்லை. டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு அவருடன் பணிச்சுமை மேலாண்மை குறித்து உரையாடினோம். இனி இப்படித்தான் இருக்கப் போகிறது. இப்போதைக்கு, அவர் டி20க்கான திட்டங்களில் இல்லை, மேலும் இளைஞர்கள் மீது கவனம் செலுத்தப்படும், ”என்று தேர்வுக் குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்து இருந்தார்.