ஆதார் ஆணையம் கைவிரிப்பு – சிபிசிஐடி விசாரணைக்கு பின்னடைவா?

0
76

கடந்த 2019 ஆம் ஆண்டு நீட் தேர்வு எழுதியதில் மோசடி ஏற்பட்டுள்ளதாக வழக்கு பதிவாகியுள்ளது. அதில் 2 மாணவிகள் உள்பட 10 பேர் மீது ஆள் மாறாட்டம் செய்து நீட் தேர்வினை எழுதி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சிபிசிஐடி இந்த 10 மாணவ – மாணவிகளின் புகைப்படங்களை பெங்களூரிலுள்ள ஆதார் ஆணையத்தில் கொடுத்து, ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது யார் என்பதை கண்டுபிடிக்க முயற்சி எடுத்துள்ளது. 

ஆனால், ஆதார் ஆணையத்தில் இருந்து கிடைத்த தகவல் சிபிசிஐடிக்கு அதிர்ச்சியையும், அதே சமயத்தில் இந்த வழக்கின் விசாரணைக்கு ஒரு பின்னடைவாகவும் அமைந்துள்ளது. ஏனென்றால்,  பெங்களூரிலுள்ள ஆதார் ஆணையம் இந்த புகைப்படங்களை வைத்து  ஆய்வு மேற்கொண்டதில் ஆள்மாறாட்டம் செய்தது யார் என்பதற்கான உரிய ஆதாரம் கிடைக்கவில்லையாம்.

ஆதலால் பெங்களூர் ஆதார் ஆணையம் ஆள் மாறாட்டம் செய்த நபர்களை அடையாளம் காண முடியவில்லை என்று சிபிசிஐடிக்கு பதிலளித்துள்ளது. “தலைமறைவாக இருக்கும் ரஷீத் எனும் முக்கிய குற்றவாளியை கண்டு பிடித்தால் மட்டுமே அனைத்து உண்மைகளும் தெரியவரும் என்றும் ரஷீத்தை பிடிப்பதில் சிபிசிஐடி தீவிரமாக இருக்கிறது” என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

author avatar
Parthipan K