பைக்கில் சாகசம்!! மாணவிகள் முன் கீழே விழுந்து மொக்கை வாங்கிய வாலிபர்!! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

0
95
A young man who fell off his bike and broke his knee trying to show off in front of the students!! Viral video recording!!

தற்போதைய இளைஞர்கள் பலர் பைக்குகளில் சாகசம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். குறிப்பாக பெண்கள் எந்த இடத்தில் அதிகமாக உள்ளார்களோ அவர்கள் முன்னிலையில் பைக்கை வைத்து சாகசம் செய்து அவர்களை திரும்பி பார்க்க வைக்கின்றனர். இவ்வாறு செய்பவர்கள் ஏதேனும் தவறு ஏற்பட்டால் உயிர் போகும் அபாயம் கூட உண்டாகும் என்பதை நினைப்பதில்லை. என்ன ஆனாலும் சரி எனக்கு கெத்து தான் முக்கியம் என்று இவ்வாறான சாகசங்களை எந்தவித பாதுகாப்பான விதிமுறைகளும் இன்றி நடத்துகின்றனர்.

அந்த வகையில் காரைக்குடியில் சாலை ஓரத்தில் பெண்கள் கூட்டமாக நின்று கொண்டுள்ளனர். அவர்கள் முன்னிலையில் இரு இளைஞர்கள் பைக்கில் சாகசம் செய்ய வேண்டும் என்று செல்கின்றனர். அவ்வாறு செல்லும் இளைஞர்கள் பைக்கின் பின் இருக்கையில் இருந்து வாலிபர் நிற்க முயன்று உள்ளார். அவ்வாறு நின்றபொழுது செருப்பு வழுக்கி விட்டு படார் என்று கீழே விழுந்தார். அவ்வாறு விழுந்தவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்தனர். மாணவிகள் முன்னிலையில் கெத்து காட்ட நினைத்து மண்ணை கவ்விய காட்சி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.