தொழிற்சாலையின் கழிவுகளை எரிக்கும் 15 அடி குழியில் தவறி விழுந்த தொழிலாளி பலி!

0
214
#image_title

தொழிற்சாலையின் கழிவுகளை எரிக்கும் 15 அடி குழியில் தவறி விழுந்த தொழிலாளி பலி!

கேரளா மாநிலம் பெரும்பாவூரில் உள்ள பிளைவுட் தொழிற்சாலையின் கழிவுகளை எரிக்கும் 15 அடி குழியில் தவறி விழுந்த தொழிலாளி ஒருநாள் தேடுதல் வேட்டைக்கு பின் குழியிலிருந்து உடல் வெந்து சிதைந்த நிலையில் மீட்பு.

கேரளா மாநிலம் கொச்சியிலுள்ள பெரும்பாவூர் பகுதியில் பிளைவுட் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள பகுதியாகும் இந்நிலையில் கொல்கத்தாவை சேர்ந்த நசீர்(23) என்பவர் அங்குள்ள பெரும்பாவூர் ஓடக்காளி சந்திப்பில் உள்ள யுனிவர்சல் பிளைவுட் நிறுவனத்தில் தற்காலிக தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார்.

தினமும் சேரும் மரக்குப்பைகளை நிறுவனத்திற்குள்ளேயே 15 அடி குழியில் கொட்டி அதனை தீ வைத்து எரிப்பது வழக்கம் நேற்று முன் தினம் மாலையும் இதேபோல் குப்பைகளை கொட்டி தீ வைத்துள்ளனர். ஒவ்வொரு முறை எரித்த பிறகும் மண்ணால் மூடி மீண்டும் எரிப்பது வழக்கம்.

காலை வரும் போது தீ மற்ரும் புகை வந்தால் இதனை தண்ணீர் ஊற்றி அணைப்பது வழக்கம் .நேற்று காலை வந்த போது தீ மற்ரும் புகை வந்ததால் அதனை தண்ணீர் ஊற்றி அணைக்க சென்ற நசீர் கால் தவறி இந்த எரிந்து கொண்டிருந்த 15 அடி குப்பை கழிவு குழிக்குள் விழுந்துள்ளார்.

உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு 6 தீயணைப்பு வாகனங்கள் கொண்டுவரப்பட்டு அவரை மீட்கும் பணி நேற்று முழுவதும் நடைபெற்று ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தீயும் குப்பை அதிகளவில் இருந்ததால் குப்பை மேட்டை அகற்ற ஹிட்டாச்சி இயந்திரம் மூலம் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

இருப்பினும் ஒரு நாள் தேடுதல் வேட்டைக்கு பின் உடல் தீயில் வெந்து உருக்குலைந்த நிலையில் துண்டு துண்டாக மீட்டனர். முறைகேடாக கழிவுகளை சேமித்து வைத்ததே விபத்துக்கு காரணம் என பஞ்சாயத்தினர் குற்றம் சாட்டியுள்ளது. கழிவுகளை அகற்றாமல் இனி எந்தப் பணியும் அனுமதிக்கப்படாது. குப்பையை அகற்ற 2 மாதங்களுக்கு முன் நோட்டீஸ் கொடுத்ததாக அசாமனூர் ஊராட்சி தெரிவித்துள்ளது.

author avatar
Savitha