சற்றுமுன்: அரசு வேலை கட்டாயம் திமுகவினர் க்கு மட்டும் தான் வேறு யாருக்கும் இல்லை – கே என் நேரு!!

0
157
A while ago: Govt jobs are compulsory for DMK only and no one else - K N Nehru!!
A while ago: Govt jobs are compulsory for DMK only and no one else - K N Nehru!!

சற்றுமுன்: அரசு வேலை கட்டாயம் திமுகவினர் க்கு மட்டும் தான் வேறு யாருக்கும் இல்லை – கே என் நேரு!!

திமுக அமைச்சர்கள் பொதுவெளியில் ஏதாவது பேசி சர்ச்சையை ஏற்படுத்திக் கொள்வதையே வழக்கமாக வைத்துள்ளனர்.அந்த வகையில் அமைச்சர் பொன்முடி அடுத்து சிக்குவது யார் என்றால் கே என் நேரு தான். இதற்கு முன்பதாகவே ஒருமுறை டிஎஸ்பி குறித்து இவர் எங்களுடன் வளர்ந்தவர் குற்றவாளையை நிரபராதியாக்கவும், நிரபராதியை குற்றவாளி ஆக்கவும் இவருக்கு தெரியும் என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

அந்த வகையில் தற்பொழுது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக பேசியுள்ளார். வெளிநாட்டில் இருந்து தமிழகத்திற்கு திரும்பும் ஸ்டாலின் வரும் 11 ஆம் தேதி சேலம் மாவட்டத்திற்கு வர உள்ளார். அங்கு நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார்.மேற்கொண்டு  ஒரு லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க இருக்கிறார்.அத்தோடு மேட்டூர் அணைக்கு சென்று குருவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து வைக்க இருப்பதாகவும் கூறுகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் வருவதை ஒட்டி சேலத்தில் அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் அனைத்தும் சரிவர நடைபெறுகிறதா என்பதை அமைச்சர் கே என் நேரு அவ்வபோது பார்வையிட்டு வருகிறார். அந்த வகையில் சேலம் மாவட்டத்திற்கு சென்றவர் அங்கு நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு சர்ச்சையை உண்டாக்கும் விதமாக பேசியது ஸ்டாலினுக்கு அடுத்த தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

இவர் வெளிநாட்டில் இருந்து வருவதற்குள் அடுத்த அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும் என்று கூறும் அளவிற்கு புகார்கள் வரிசை கட்டி நிற்கின்றது. கே என் நேரு அந்த நிகழ்ச்சியில், தகுதியுள்ள திமுகவினர் அனைவருக்கும் கட்டாயம் அரசு பணி வாங்கி தருவேன் எனக் கூறியுள்ளார்.இவ்வாறு இவர் பேசியது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் என அனைவரும் இவர்கள் ஆட்சியில் இருந்தால் இவர்களுடைய ஆட்கள் தான் அரசு பணியில் இருக்க வேண்டுமா என கேள்வி எழுப்பியும் வருகின்றனர். அதுமட்டுமின்றி ஒப்பந்த ஊழியர்கள் பலரை பணியில் இருந்து நீக்கிவிட்டு திமுகவை சேர்ந்தவர்களை பணி நியமனம் செய்தது உண்மை என இவரே வெட்ட வெளிச்சம் ஆக்கியுள்ளார் என்றும் கூறுகின்றனர். பலரின் கனவாக இருக்கும் அரசு வேலையை திமுக வை சேர்ந்தவர்கள் மட்டும் இவ்வாறு சூறையாடுவது நியாயமானது அல்ல என்றும் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.