வைத்தியலிங்கம் திட்டம் அனைத்தும் அம்பேல்.. மாஜிகளை வைத்து காய் நகர்த்தும் எடப்பாடி!!   

0
117
A way to move pieces with the old ones!!
A way to move pieces with the old ones!!

வைத்தியலிங்கம் திட்டம் அனைத்தும் அம்பேல்.. மாஜிகளை வைத்து காய் நகர்த்தும் எடப்பாடி!!

ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் என இரண்டு அணிகளாக பிரிந்த நிலையில், அமைச்சர்களும் அவர்களுக்கு ஏற்றார் போல் வேறு வேறு திசைகளில் சென்றனர். குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சசிகலா மற்றும் ஓபிஎஸ் உடன் தொடர்பு கொண்டவர்களை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்கம் செய்தார்.

அந்த வகையில் பெரும்பான்மையான அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பக்கமே இருந்தனர். இருப்பினும் கட்சியை விட்டு வெளியேறிய அதிருப்தி அடைந்த அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் எடப்பாடிக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர்.

இவர்கள் அனைவரும் தனித்தனியாக குரல் கொடுத்து வந்ததால் எதுவும் வெளியே தெரியவில்லை. அதுமட்டுமின்றி தற்பொழுது வெளிவந்த நீதிமன்றத்தின் உத்தரவும் எடப்பாடி அவர்களுக்கு சாதகமாக அமைந்ததால் ஓபிஎஸ் அவர்கள் அடுத்த கட்டத்திற்கு நகர முடிவு செய்தார்.

அதுதான் தினகரன் மற்றும் சசிகலாவுடன் கூட்டணி. ஆனால் இவர்கள் மூவரும் ஒன்றிணைந்து விட்டார்கள் என்று கூறிய நிலையில் எந்த ஒரு சந்திப்பையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. இவர்கள் மூவரும் ஒரே மேடையில் சந்திக்க வைத்து பலத்தை காட்ட வேண்டும் என்ற திட்டத்தை மாஜி அமைச்சர் வைத்திலிங்கம் வகுத்துள்ளார்.

அந்த வகையில் வரும் ஏழாம் தேதி நடைபெற போகும் தனது மகன் திருமணத்திற்கு ஓபிஎஸ் தினகரன் சசிகலா ஆகிய மூவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். இவ்வாறு இவர்கள் மூவரும் ஒரே மேடையில் ஏறி தங்களது கூட்டணியை காட்டும் பட்சத்தில் எடப்பாடி அவர்களுக்கு சற்று சரிவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி முக்குலத்தோர் சமூகத்தினருக்கு அதிமுக எப்பொழுதும் எதிரானவர்கள் தான் என்பதை காட்டுவதாகவும் இவர்கள் ஒரு பிம்பம் வைக்கின்றனர். இதனையெல்லாம்  தவிர்க்க எடப்பாடி அவர்கள் அடுத்த திட்டத்தை தீட்ட ஆரம்பித்துள்ளார்.

இவர்கள் திருமணத்திற்கு போவது போல நமது கட்சியினருக்கும் அழைப்பு வந்திருந்தால் கட்டாயம் செல்ல வேண்டும். திருமணத்திற்கு செல்லாமல் இருக்கக்கூடாது என்று மாஜி அமைச்சர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். அவ்வாறு நாம் போகாமல் இருந்தால் முக்குலத்தோர் சமூகத்தினருக்கு எதிரானவர்கள் என்ற கட்டமைப்பை இவர்கள் உருவாக்கி விடுவார்கள் அதற்கு ஒருபோதும் நாம் இடம் கொடுக்கக் கூடாது என்று எடப்பாடி அவர்கள் அறிவுறுத்தியுள்ளாராம்.

அதேபோல கல்யாணத்திற்கு செல்பவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் அவர்கள் பக்கம் சென்று விடக்கூடாது என்று கூறியுள்ளாராம். அது மட்டும் இன்றி பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தற்பொழுது ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கு தொடுத்துள்ள நிலையில் அதனின் முடிவுகள் வரும் வரை அமைதி காக்கும் படியும், முடிவு நமக்கு சாதகமாக வரும் பட்சத்தில் நமது தாக்கத்தை காட்டலாம் என்று திட்டமிட்டு உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.