சாராயம் கஞ்சாவிற்கு புகழ்பெற்ற கிராமம் – கண்டுகொள்ளாத காவல்துறை 

0
154
#image_title

சாராயம் கஞ்சாவிற்கு புகழ்பெற்ற கிராமம் – கண்டுகொள்ளாத காவல்துறை

தங்ககோவிலுக்கு புகழ்பெற்ற வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே  செட்டிகுப்பம் கிராமம் இருக்கிறது.

கிராமம் என்றாலே கூட்டாக வசிப்பதை பார்த்திருப்போம். ஆனால் இந்த கிராமத்தில் மட்டும்  500 க்கும் மேற்ப்பட்ட கிராம மக்கள், கூட்டாக சேர்ந்து கள்ளச்சாராயம், கஞ்சா விற்று வருகின்றனர்.

மேலும் பேர்ணாம் பட்டு மலையில் கள்ளச்சாராயம் விற்கும் மற்றொரு கும்பலும் இருக்கிறது. இந்த கள்ளச்சாராயம் கும்பலுடன் தொடர்பு கொண்ட கிராம மக்கள், சாராயம் மற்றும் கஞ்சாவை மொத்த விலைக்கு வாங்கி அதை சில்லறை விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

இதனால் அந்த கிராமத்தில், இவர்களுக்கு இடையே நடக்கும் தொழில் போட்டியல் தகராறு ஏற்படுவது வழக்கம்.

அந்த பகுதி காவலரும் லஞ்சம் வாங்கி கொண்டு, இவர்கள் விற்பதற்கும் அனுமதி அளித்துள்ளார். இதனை விரும்பாத அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்களில் பலரும் அந்த கிராமத்தை விட்டு வெளியேறிவிட்டனர்.

சுற்று வட்டாரத்தில் இருக்கும் மக்கள் பலமுறை, குடியாத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். லஞ்சம் பணத்திற்கு அடிப்போன அந்த காவலர் இதுகுறித்து நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த குடியாத்தம் கிராம மக்கள், மாவட்ட ஆட்சியரிடம்  அங்கு நடக்கும் சாராயம், கஞ்சா வியாபாரம் பற்றியும், அதற்கு ஒத்துழைக்கும் காவலர் பற்றியும் புகார் மனுவை அளித்துள்ளனர்.

மனுவை ஏற்ற மாவட்ட ஆட்சியர் சம்மந்த பட்ட அனைவரின் மீதும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.

author avatar
Jayachithra