மலைப் பாதையில் வேன் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து! வாகனம் அப்பளம் போல் நொறுங்கிய காட்சி!

0
60
A van and a truck collide head-on on a mountain road! The vehicle was smashed like a pancake!
A van and a truck collide head-on on a mountain road! The vehicle was smashed like a pancake!

மலைப் பாதையில் வேன் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து! வாகனம் அப்பளம் போல் நொறுங்கிய காட்சி!

ஈரோடு மாவட்டம் தாளவடியில் இருந்து சத்தியமங்கலம் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு காலை எட்டு மணியளவில் லாரி ஓன்று சென்று கொண்டிருந்தது.அப்போது அந்த லாரியானது திம்பம் மலைப்பாதையில் 20 வது கொண்டை ஊசி வளைவில் சென்று கொண்டிருந்தது.

அப்போது எதிர் திசையில் அதே வளைவில் ஈரோட்டில் இருந்து மைசூர் நோக்கி செல்லும் வேன் வந்தது.இந்நிலையில் லாரி மற்றும் வேன் இரண்டும் கண்ணிமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் மோதி கொண்டது.அதில் வேனின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கி சேதம் ஆனாது.லாரி டிரைவருக்கும் வேன் டிரைவருக்கும் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிகப்பட்டது.மேலும் இந்த விபத்து குறித்து ஆசனூர் போலீசார்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஆசனூர் போலீசார் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர்.

author avatar
Parthipan K