நயன்தாராவின் ரசிகர்களுக்கு காத்திருக்கும் டிரிட்! புதிய படம் ரிலீஸ் தேதி வெளியீடு!

0
191
a-treat-for-nayantharas-fans-new-movie-release-date-released
a-treat-for-nayantharas-fans-new-movie-release-date-released

நயன்தாராவின் ரசிகர்களுக்கு காத்திருக்கும் டிரிட்! புதிய படம் ரிலீஸ் தேதி வெளியீடு!

லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா.இவர் நானும் ரவுடி தான் என்ற படத்தில் கதாநாயகி நடித்திருந்தார் அப்போது அந்த படத்தை இயக்கிய விக்கேஷ் சிவனிற்கும் நயன்தாராவிற்கும் காதல் மலர்ந்தது.அதனையடுத்து இவர்கள் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்தனர்.அதன் பிறகு சில மாதங்களுக்கு முன்பு இவர்களின் நிச்சயதார்த்தம் நடந்தது.

மேலும் ஜூன் 9ஆம் தேதி மாமல்லபுரம் அருகே கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் விக்கி மற்றும் நயன்தாராவின் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு திருமணம் ஆனா நான்கே மாதங்களில் இரட்டை குழந்தை பிறந்தது.அதனை விக்னேஷ் சிவன் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டார்.

இவர்களுக்கு வாடகை தாய் மூலம் தான் குழந்தை பிறந்தது அதனால் இவை பெரும் சர்ச்சையாக வெடித்தது.அதன்பிறகு இரட்டை குழந்தை விவகாரம் குறித்து அரசு தரப்பில் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.அந்த விசாரணையில் விக்கி மற்றும் நயன்தாரா இருவரும் கடந்த 2016 ஆம் ஆண்டே திருமணம் செய்து கொண்டதாகவும் கடந்த ஆண்டு வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்ததும் தெரியவந்தது.

இந்நிலையில் நயன்தாரா கோல்டு என்ற படத்தில் பிருத்விராஜீக்கு ஜோடியாக நடித்துள்ளார்.குழந்தை பிறந்த தகவலை வெளியிட்ட பின்னர் நயன்தாரா நடிக்கும் படங்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.ஒருமாத கால இடைவெளிக்கு பின்னர் கோல்டு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை மலையாளத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர்ஹிட் ஆன பிரேமம் படத்தை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் தான்  இயக்கியுள்ளார்.இந்த படம் கடந்த செப்டம்பர் மாதமே ரிலீசாக இருந்தது.ஆனால் ஒரு சில பணிகள் முடிவடையாமல் இருந்ததால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது.இந்நிலையில் தற்போது இந்த படம் வருகிற டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் வெளியாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K