ஸ்ரீரங்கம் சித்திரை தேருக்கு பக்தர்கள் கொளுத்திய சூடம்!! பூட்ஸ் காலால் அணைத்த போக்குவரத்து காவல் ஆய்வாளர்!!

0
151
#image_title

ஸ்ரீரங்கம் சித்திரை தேர் திருவிழாவில் பக்தர்கள் கொளுத்திய சூடத்தை, போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஒருவர் தனது பூட்ஸ் காலால் மிதித்து அணைத்து தள்ளிய சம்பவம் பக்தர்கள் மனதை புண்படுத்தியுள்ளது – தற்பொழுது அந்த காட்சிகள் சமூக வலைத்தளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

திருச்சி, ஸ்ரீரங்கம், அருள்மிகு அரங்கநாத சாமி திருக்கோவில் சித்திரை தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. தேர் சித்திரை வீதிகளில் வலம் வந்த பொழுது பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற பழம், பூ வைத்து, தேங்காய் உடைத்து, சூடமேற்றி வழிபட்டனர்.

சில பக்தர்கள் சிதறு தேங்காய் உடைத்ததால் ஆங்காங்கே தேங்காய் ஒடுகள் பரவி கிடந்தது. அந்த தேங்காய் சில்லுகள் பக்தர்கள் பாதங்களை
காயப்படுத்தும் என்பதால், போலீசார், பக்தர்களை தேங்காய் உடைக்கவும்,
சூடமேற்றுவதற்கும் அனுமதி மறுத்தனர்.

தேரை வடம் பிடித்து இழுத்து வரும் பொழுது அவர் காலில் சூடம் சுட்டு விடுமோ அல்லது தேங்காய் செல்லு காலில் குத்தி காயம் ஏற்படாத வண்ணம் போலீசார் அறிவுறுத்தினர்.

ஆயினும் பக்தர்கள் பலரும் அதை காதில் வாங்காமல் சூடம் ஏற்றி தேங்காய் உடைத்து வழிபட்டனர். இதனைக்கண்ட போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஒருவர் ஆத்திரத்துடன் சூடத்தை காலால் மிதித்து அணைத்து தள்ளினார்.

இச்சம்பவம் பக்தர்கள் மனதை பெரிதும் புண்படுத்தியது. தற்பொழுது இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

author avatar
Savitha