தடை உத்தரவை மீறியதால் வாலிபர் ஒருவர் மாயம்! ஆன்லைன் விளையாட்டு மீது மனு தாக்கல்!

0
82

தடை உத்தரவை மீறியதால் வாலிபர் ஒருவர் மாயம்! ஆன்லைன் விளையாட்டு மீது மனு தாக்கல்!

ப்ரி பயர் ஆன்லைன் விளையாட்டு தடை செய்யப்பட்ட பிறகும் எவ்வாறு ஆன்லைனில் கிடைக்கிறது.- நீதிபதி  இது போன்ற விளையாட்டுகளால் இளைய சமுதாயம் வீணாகுவதை ஏற்றுக்கொள்ள முடியாது – நீதிபதிகள் கருத்து.

தடை செய்யப்பட்ட இது போன்ற விளையாட்டுகள் ஆன்லைனில் கிடைக்காமல் இருப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் – நீதிபதிகள்

இது குறித்து விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. நாகர்கோவிலைச் சேர்ந்த அயறின் அமுதா உயர் நீதிமன்ற மதுரை கிளைகள் தாக்கல் செய்த மனு. எனது மகள் இதழ் வில்சன் நாகர்கோவில் உள்ள தனியார் கல்லூரியில் இளநிலை பட்டம் படித்து வருகிறார்.

இந்நிலையில் எனது மகள் கடந்த ஆறாம் தேதி முதல் காணவில்லை இது குறித்து கன்னியாகுமரி வடசேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன் புகாரின் பெற்றுக் கொண்ட காவல்துறையினர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனது மகள் பப்ஜி மற்றும் பிரி பயர் ஆகிய ஆன்லைன் விளையாட்டு அதிக ஆர்வம் காட்டுவதாக இருந்தால் இதன் மூலம் என் மகளுக்கு ஜெப்ரின் என்பவன் பழக்கமாகி உள்ளான் எனவே அவன்தான் அவனது நண்பருடன் எனது மகளை கிடைத்திருக்க வேண்டும் எனவே எனது மகளை மீட்டு தர காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி மகாதேவன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதிகள் இந்திய அரசால் ஆன்லைன் விளையாட்டுகளான ஃப்ரீ ஃபயர் தடை செய்யப்பட்டு விட்டது இருந்த போதும் இந்த விளையாட்டை எவ்வாறு மீண்டும் விளையாட முடிகிறது.

சைபர் குற்றப்பிரிவு போலீசார் இதுகுறித்து என்ன நடவடிக்கை எடுத்து உள்ளார்கள் ஏன் கடும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இதுகுறித்து விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக்கூறி வழக்கு விசாரணை ஒத்திவைப்பு.

author avatar
CineDesk