கோவை மாவட்டத்தில் ஒரே ஃபோன் காலில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்த வாலிபர்! திருமண ஆசை தான் இதற்கு காரணமா?

0
80
A teenager lost lakhs of money in a single phone call in Coimbatore! Is it due to desire for marriage?
A teenager lost lakhs of money in a single phone call in Coimbatore! Is it due to desire for marriage?

கோவை மாவட்டத்தில் ஒரே ஃபோன் காலில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்த வாலிபர்! திருமண ஆசை தான் இதற்கு காரணமா?

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சேதுபதி நகரை சேர்ந்தவர் நவீன் (28). இவர் ஏசி விற்பனை மற்றும் ஏசி சர்வீஸ் செய்யும் தொழில் செய்து வருகிறார். அவர் அவருடைய திருமணத்திற்காக திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருந்தார். அவரது பதிவை பார்த்த நெதர்லாந்து நாட்டில் வசித்து வரும் கிருஷ்ணகிரியை சேர்ந்த சூசன் என்ற பெண் அவரை தொடர்பு கொண்டு திருமணம் செய்ய சம்மதம் என்று தெரிவித்தார்.

மேலும் அந்த பெண் அவரது சொந்த ஊர் கிருஷ்ணகிரி என்றும் அவர் அப்பா இறந்து விட்டார் எனவும் தற்போது நெதர்லாந்து நாட்டில் டாக்டராக வேலை செய்து வருவதாகவும் கூறினார். மேலும் அவர் நவீனை திருமணம் செய்து கொண்டு சொந்த ஊரில் சொத்துக்களை வாங்கி வசிக்க போவதாகவும் கூறினார். மேலும் அதனைக் கேட்ட நவீன் திருமணம் செய்து கொள்வதற்கு சம்பந்தம் தெரிவித்தார். இதனை அடுத்து அடிக்கடி இரண்டு பேரும் வாட்ஸ் அப் அழைப்பு மூலமாக பேசி வந்தார்கள்.

மேலும்  கடந்த சில மாதங்களுக்கு முன் சூசன் தனது தம்பியுடன் டெல்லிக்கு வருவதற்கு டிக்கெட் எடுத்து விட்டதாக கூறி அதனை வீடியோ அழைப்பு  மூலமாக நவீனிடம் காண்பித்தார். நவீனும் அதனை உண்மை என நம்பினார். மேலும்   கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி நவீன் செல்பவனுக்கும் அழைப்பு  வந்தது  அதில் பேசிய நபர் டெல்லி விமான நிலையத்திலிருந்து சுங்க அதிகாரி மணிசர்மா பேசுவதாக கூறினார். அவரிடம் சூசன் அவரது தம்பி நந்தி ஆகியோர் அந்த நாட்டில் இருந்து டெல்லிக்கு வந்ததாகவும் தெரிவித்தார்.

மேலும் அவர்கள் வரும்போது 1 லட்சம் யூரோக்களை எடுத்து வந்து உள்ளனர்.  அதன் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 85 லட்சம் எனவும் இதற்கு வரியாக ரூ.16,24,400 செலுத்த வேண்டும் எனவும் கூறினார். அதனை நம்பிய நவீன் அவர்கள் கூறிய வங்கி கணக்கில் மொத்த தொகையும் செலுத்தி விட்டார். பின்ன சூசனின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அவரது செல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

அப்போது நவீன் ஆற்றப்பட்டது தெரிய வந்தது. பின்னர் என்னிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக்கு  கூறி ஒரு 16 லட்சத்து 24 ஆயிரத்து 400 பணத்தை மோசடி செய்ததாக நவீன் கோவை கோபாலபுரம் பகுதியில் செயல்பட்டு வருகின்ற மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இயங்கி வருகின்ற மாவட்ட சைபர் கிராம் போலீசில் நேற்று புகார் அளித்தார். அந்தப் புகாரில் முழு விவரங்களையும் பதிவு செய்தார். இந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயாதேவி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

author avatar
Parthipan K