Breaking News
கோயம்பேடு அருகே காலி மனையில் கொட்டபட்டிருந்த குப்பையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பரபரப்பு

கோயம்பேடு அருகே காலி மனையில் கொட்டபட்டிருந்த குப்பையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பரபரப்பு
கோயம்பேடு அடுத்த நெற்குன்றம் சாலை வேதா நகரில் பல குடும்பங்கள் வசிக்கும் வீடுகளுக்கு அருகில் காலி மனை ஒன்று உள்ளது. இந்த காலிமனை நீண்ட நாட்கள் பயன்படுத்தபடாமல் இருப்பதால் புதர் மண்டியும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் குப்பைகளை கொட்டுவதால் காகித குவியல்களாக இருந்து உள்ளது.
இந்த நிலையில் திடீரென அதிலிருந்த குப்பைகள் தீப்பற்றி எரிய ஆரம்பத்துள்ளது.சிறிய அளவில் எரிய தொடங்கிய தீ சிறிது நேரத்தில் அதிக அளவில் எரியத்தொடங்கியது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயற்ச்சி செய்தனர். அதற்க்குள் தீ வேகமாக பரவி கொழுந்து விட்டு எறிய தொடங்கியது.
இதனால் கோயம்பேடு தீயணைப்பு நிலையத்திற்க்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த கோயம்பேடு தீயனைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் சேதம் ஏதும் ஏற்படவில்லை. காலி இடத்தில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது..