திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்! ரிக்டரில் 4.0 ஆக பதிவு!

0
100

திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்! ரிக்டரில் 4.0 ஆக பதிவு!

மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உக்ரூல் நகரில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் வீடு, அலுவலகங்கள், ஆகியவற்றில் உள்ள பொருட்கள், கட்டிடங்கள் லேசாக குலுங்கின.

இன்று காலை 6:14 மணி அளவில் மணிப்பூரின் உக்ரூல் நகரில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. மிதமான அளவில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ஆனது 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இந்த தகவலை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தனது செய்தியில் தெரிவித்துள்ளது.

காலை நேரம் என்பதால் மக்கள் அனைவரும் வீட்டில் இருந்துள்ளனர். திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டு பொருட்கள் குலுங்கியதால் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அனைவரும் வீட்டை விட்டு வெளியேறினர். மக்கள் அனைவரும் தெருக்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். ஆயினும் நிலநடுக்கத்தால் மக்களுக்கு ஏற்பட்ட பொருள் இழப்புகள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த எந்த செய்தியும் இதுவரை வெளிவரவில்லை.

திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை தோற்றுவித்து உள்ளது.