திடீரென விதிக்கப்பட்ட தடை!  கோவிலுக்கு செல்ல காத்திருந்த பக்தர்களுக்கு வெளிவந்த அதிர்ச்சி செய்தி!

0
133

திடீரென விதிக்கப்பட்ட தடை!  கோவிலுக்கு செல்ல காத்திருந்த பக்தர்களுக்கு வெளிவந்த அதிர்ச்சி செய்தி! 

சதுரகிரி மலைக் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல திடீரென தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற சிவன் கோயிலாகும். இது விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அமைந்துள்ளது. மாதந்தோறும் வரும் பிரதோஷம், அமாவாசை, மற்றும் பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் மலையேறி சென்று சுந்தர மகாலிங்கம் கோவிலில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். பிரதோஷ நாட்களில் அங்கு சிறப்பு ஆராதனை நடைபெறும்.

இந்நிலையில் நாளை வெள்ளிக்கிழமை 3.2.2023 பிரதோஷ நாளாகும். இந்த கோவிலுக்கு தை மாத பிரதோஷம் மற்றும் தொடர்ந்து வரும் பௌர்ணமியை முன்னிட்டு நாளை வெள்ளிக்கிழமை தொடங்கி 6.2.2023 திங்கட்கிழமை வரை நான்கு நாட்கள் சதுரகிரி மலையில் ஏறி சுந்தர மகாலிங்கம் கோவிலில் தரிசனம் செய்ய விருதுநகர் வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்து விட்டதால் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே மழையினால் எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தடுக்க நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு நாட்களுக்கு சதுரகிரி மலைக் கோவிலுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் பக்தர்களுக்கு தடை விதித்துள்ளது.