இனி இங்கு நாளை முதல் கோலாகலமாக நடைபெறும் சிறப்பு பூஜை!அப்படி நாளை என்ன விசேஷம் இருக்கு??

0
89
A special pooja will be held here from tomorrow in a big way! So what's special about tomorrow??
A special pooja will be held here from tomorrow in a big way! So what's special about tomorrow??

இனி இங்கு நாளை முதல் கோலாகலமாக நடைபெறும் சிறப்பு பூஜை!அப்படி நாளை என்ன விசேஷம் இருக்கு??

கேரளாவிலுள்ள சிறப்பு வாய்ந்த சபரிமலை கோவில் நடை ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் நாளில் திறக்கப்படுவது வரலாற்றில் ஒரு பழக்கமாகும்.இவ்வகையில் ஆடி மாத பூஜைகாக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணியளவில் திறக்கப்படும் என தெரிவித்துள்ளது.

இன்று தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல் சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி கருவறையை திறந்து வைக்கிறார்.இன்றைய தினம் சில சிறப்பு பூஜைகளும் நடக்காது என்பதால் இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.எனவே நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும்.

வழக்கமான பூஜைகள் வழிபாடுகளுக்கு பின் இரவு 10 மணிக்கு கோவிலின் நடை அடைக்கப்படும். இதைதொடர்ந்து 5 நாட்கள் ஆடி மாத சிறப்பு பூஜை  வழிபாடுகள் நடைபெறும். இந்த நாட்களில் உஷபூஜை, கணபதி ஹோமம் உள்பட வழக்கமான பூஜைகளுடன் படி பூஜை உதயாஸ்தமன பூஜை ஆகிய சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

தினமும் காலையில் நெய்யபிஷேகமும் நடத்தப்படும் வழக்கம் போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான ஆன்லைன் முன்பதிவு நடைபெற்று வருகிறது.

பக்தர்களின் வசதிக்காக நிலக்கல் பகுதியில் உடனடி தரிசன முன்பதிவு வசதி செய்யப்பட்டுள்ளது. தரிசனத்திற்கு வரும் அய்யப்ப பக்தர்கள் அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர வேண்டும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

author avatar
Parthipan K