இருட்டில் பத்தளிப்போருக்கு ஒளி கொடுக்கும் அறிவுச்சுடர் புத்தகங்கள் முதலமைச்சர் ஸ்டாலின்!

0
78

மக்கள் சிந்தனை பேரவை சார்பாக ஈரோட்டில் புத்தகத் திருவிழா ஏற்பாடு நடந்தது. இதில் காணொளி காட்சி மூலமாக முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றுக் கொண்டு ஆரம்பித்து வைத்தார். அதன் பிறகு உரையாற்றிய அவர் புத்தகத் திருவிழா என்பது அறிவு திருவிழா, தமிழ் திருவிழா சென்னையை தொடர்ந்து மேலும் சில மாவட்டங்களில் இது போன்ற புத்தக கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அனைத்து மாவட்டங்களிலும் அரசின் உதவியுடன் இதுபோன்ற புத்தகக் கண்காட்சி நடத்துவதற்கு இந்த வருடம் 4.96 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனக் கூறியிருக்கிறார்.

தலைநகர் சென்னையில் புத்தக கண்காட்சி நடத்துவதற்கு கடந்த ஜனவரி மாதம் தேதி குறிக்கப்பட்டது. நோய் தொற்று அதிகமான அதன் காரணமாக, இந்த தேதியில் மாற்றம் செய்யப்பட்டது. ஏற்கனவே அரங்கம் அமைத்த காரணத்தால் பதிப்பாளர்களுக்கு இழப்பு உண்டானது. இதை ஈடு செய்யும் விதமாக உடனடியாக 50 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்கப்பட்டது, எனக் கூறியிருக்கிறார்.

தமிழ் நூல்கள் நாட்டுடைமை, எழுத்தாளர்கள் பிறந்தநாளில் கூட்டங்கள் குறைந்த விலையில் சங்க இலக்கிய நூல்கள் வெளியீடு, திராவிட களஞ்சியம் உருவாக்கம், கலைஞர் எழுதுகோல் விருது, உலக பல்கலைக்கழகங்களில் செம்மொழி தமிழ் இருக்கைகள், நூலகங்களுக்கு சிற்றுதல்கள், இலக்கிய மாமணி விருதுகள், உயரிய விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு கனவு இல்லம், திசை தோறும் திராவிடம், முத்தமிழ் அறிஞர் மொழிபெயர்ப்பு திட்டம், போன்ற ஏராளமான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகின்றது.

அதோடு அண்ணா தெரிவித்ததை போல ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சிறு நூலகமாவது அமைக்க வேண்டும் என்றும் சிந்தனையை வளர்த்துக் கொள்ள எல்லோரும் புத்தகங்களை வாசிக்க வேண்டும் எனவும் காணொளி மூலமாக முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார்.

தமிழின் மிக சிறந்த படைப்புகள் ஆங்கிலம் மலையாளம் கன்னடம் தெலுங்கு போன்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியிருக்கிறது. இது போன்ற மொழிபெயர்ப்பு பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மற்ற மொழிகளிலிருந்து தமிழுக்கு பல நூல்கள் கொண்டு வரப்படவிருக்கின்றன என தெரிவித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

வெளிநாட்டு படையெடுப்புகள் மாற்றின படையெடுப்புகள் வெளிநாட்டு மொழி படையெடுப்புகள் வெளிநாட்டு பண்பாட்டு படையெடுப்புகள் இவ்வாறு எப்படி வந்தாலும் தமிழ் மொழி தன்னையும் காத்து, தமிழினத்தையும் காத்துக் கொண்டது. தமிழ்நாட்டையும் காத்தது, தமிழின் பெருமையை சிறப்பையும் அனைவரும் உணர்வதற்கு இதுபோன்ற புத்தகத் திருவிழாக்கள் தான் அடித்தளமாக இருக்கின்றன என கூறியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

தமிழகத்தில் தமிழர்களின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றும், எத்தனை படையெடுப்புகள் வந்த போதிலும் தமிழ் மொழி தன்னை காத்துக்கொண்டுள்ளது. தமிழகத்தையும், காத்துக் கொண்டுள்ளது. அறியாமை எனும் இருட்டில் தத்தளித்துக் கொண்டிருப்பவருக்கு ஒளி கொடுக்கும் அறிவு சுடர்தான் புத்தகங்கள்.

வீட்டுக்கு ஒரு நூலகம் அமைய வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் அண்ணா விரும்பினார் அப்படி எல்லோரும் தங்களுடைய வீட்டில் சிறு நூலகமாவது அமைத்திருக்க வேண்டும் என உரையாற்றினார் முதலமைச்சர் ஸ்டாலின்.