ஊரடங்கை முழுமையாக செயல்படுத்தி 100 சதவீதம் பாதிப்பு இல்லாமல் காக்கும் ஊராட்சிக்கு ₹50000 பரிசு

0
121

ஊரடங்கை முழுமையாக செயல்படுத்தி 100 சதவீதம் பாதிப்பில்லாமல் காக்கும் ஊராட்சிக்கு ₹50000 பரிசு

திருத்தனி அருகே உள்ள திருவாலங்காடு ஒன்றியக்குழு பெருந்தலைவர் ஜீவா விஜயராகவன் அவர்கள் தங்கள் ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார் அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

உலகத்தையே அச்சத்தில் ஆழ்த்தி உள்ள கொரோனோ வைரஸ் பாதிப்பு இப்போது இந்தியாவையை பாதிக்க தொடங்கி உள்ளது. இதனை தடுக்கும் பொருட்டு மத்திய மாநில அரசுகள் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது‌. 21 நாட்கள் ஊரடங்கை பாரத பிரதமர் நரேபனந்திர மோடி அவர்கள் அறிவித்துள்ளார். இதற்கு மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். மக்தளை ஒத்துழைக்கச் செய்வது உள்ளாட்சி பிரதிநிதிகளின் கடமை ஆகும்.

நமது ஊராட்சியின் சார்பில் அனைத்து கிராமங்களுக்கும் கிருமி நாசினிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஊராட்சிகளில் தூய்மைப் பணிகளை சிறப்பாக செயல்படுத்தியும் மக்களிடையே தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியும் மக்களை தனித்து இருக்குமாறு அறிவுரை வழங்குதல் வேண்டும்.

உள்ளாட்சி பிரதிநிதிகளும், ஊராட்சி அலுவலர்களும், மருத்துவப் பணியாளர்களும் இணைந்து மக்களுக்கு வேண்டிய அனைத்து அடிப்படை தேவைகளையும் நிவர்த்தி செய்தல் வேண்டும். மேலும் எந்த ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டு 100 சதவீதம் மக்களை காக்கிறீர்களோ அந்த ஊராட்சிக்கு எனது சொந்த செலவில் ₹50000 வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

author avatar
Parthipan K