மீண்டும் உருவாகிய புயல்! தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களிலும் கனமழை!

0
148
A reborn storm! Heavy rain in these 8 districts in Tamil Nadu!
A reborn storm! Heavy rain in these 8 districts in Tamil Nadu!

மீண்டும் உருவாகிய புயல்! தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களிலும் கனமழை!

கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டு புயலாக மாறியது.அந்த புயலிற்கு மாண்டஸ் என பெயர் வைக்கப்பட்டது.மேலும் சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யும் என அறிவித்தது.அதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர்.

அதனை தொடர்ந்து மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண நிதி வழங்கபடும் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது.ஆனால் தற்போது அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளபடாதது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு திசை மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு திசை மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் கடந்த வெள்ளிகிழமை அன்று  5.30 மணிக்கு காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது.

மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காலை 8.30 மணியளவில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளின் நிலை கொண்டது.அதனை தொடர்ந்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் சென்னை, கடலூர், திருவாரூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, தஞ்சை, நாகை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளனர்.

author avatar
Parthipan K