ஜிப்மரில் சிகிச்சை கட்டணம் முறையை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

0
185
#image_title

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையை தனியாருக்கு விற்பனை செய்ய மோடி அரசு திட்டம் என ஜிப்மரில் சிகிச்சைக்கு கட்டணம் முறையை அறிவித்த ஜிப்மர் நிர்வாகத்தை கண்டித்து மருத்துவமனை முன்பாக விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் குற்றச்சாட்டு.

புதுச்சேரியில் உள்ள மத்திய அரசு நிறுவனமான ஜிப்மர் மருத்துவ மனையில் சிகிச்சை பெறுவதற்கு ஏழை எளிய மக்களிடம் கட்டணம் வசூல் செய்யும் ஜிப்மர் நிர்வாகத்தை கண்டித்து புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி, ரவிக்குமார் எம்.பி உள்ளிட்ட மூன்று மாவட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என 500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன் ஜிப்மர் மீண்டும் மக்கள் மருத்துவமனையாக தொடர வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடைபெறுகின்றது.

நாட்டில் பல விமான நிலையங்கள், துறைமுகங்கள் தனியாருக்கு விற்க்கப்பட்டுள்ளது. என்.எல்.சி விற்க முயற்சி செய்கின்றார் நரேந்திர மோடி ஆனால் இந்திராகாந்தி பல்வ் தனியார் நிறுவனங்களை அரசுடமை ஆக்கினார், பல தனியார் வங்கிகள் அனைத்தும் தேசிய மயமாக்கப்பட்டது.

ஆனால் அனைத்து அரசு சொத்துக்களும் தனியாருக்கு தற்போது விற்கப்படுகின்றது. இது தான் காங்கிரசுக்கும் பாஜாகவிற்கும் உள்ள வித்தியாசம் நான் காங்கிரஸ் கட்சிக்கு வக்காலத்து வாங்கவில்லை இது தான் உண்மை நிலை என்ற திருமாவளவன்,

மொழி கலப்பு ஏற்பட வேண்டும் என்பதற்காகத்தான் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனைத்து மத்திய அரசு நிறுவனங்களில் வட இந்தியர்களை கொண்டுவந்துள்ளார்கள். ஜிப்மரில் வட இந்தியர்களை நியமித்தால் நோயாளிகளுக்கு எப்படி சிகிச்சையளிப்பார்கள்.

நோயாளியின் வலியை எப்படி தெரிந்துகொள்வார்கள். ஒரே நாடு ஒரே கலாச்சாரத்தை திணிக்க மருத்துவத்துறையையும் மத்திய மோடி அரசு பயன்படுத்துகின்றது என குற்றஞ்சாட்டிய திருமாவளவன்.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையை கட்டணம் வசூலிக்கும் நிறுவனமாக்கி தனியார் நிறுவனத்திடம் கொடுப்பது தான் மத்திய அரசின் திட்டம் மற்றும் மோடியின் கொள்கைகளுள் ஒன்று அதையும் அதானியிடம் தான் கொடுக்க வேண்டும் என்ற நிலையில் இருப்பார்கள்.

ஏனெனில் அதானியின் சொத்துக்கள் அனைத்தும் மோடியின் சொத்துக்கள். உலக பணக்காரர்களில் மோடி மூன்றாவது இடத்தில் இருக்கின்றார் என்பது தான் அர்த்தம், அம்பானி குறித்து பாராளுமன்றத்தில் விசாரணை செய்திருந்தால் மோடியின் முகத்திரை கிழிந்திருக்கும் என பேசிய திருமாவளவன்.

இடஒதுக்கீடு கோரிக்கைகளை எழுப்பக்கூடாது என்பதற்காகத்தான் மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படுகின்றது.

இதன் மூலம் எளிய மக்கள் கல்வி, வேலை பெறக்கூடாது என்ற நிலைப்பாடு தான் சனாதனம் என்று நாங்கள் குறிப்பிடுகின்றோம் என்றவர் கல்வியையும், மருத்துவத்தையும் கட்டணமில்லாமல் வழங்க வேண்டும் இது தான் சிறுத்தைகளின் மாடல் என்றார்.

மேலும் மோடி அரசு இன்னும் ஓராண்டு காலம் தான் ஆட்சியில் இருக்கும் அதை தூக்கி எரியப்படவேண்டும் என ஜனநாயக கட்சிகளுக்கு அறைகூவல் விடுக்கின்றது விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்தியாவில் எந்த கட்சிகளுக்கும் இல்லாத வகையில் விடுதலை சிறுத்தைகட்சிகள் சோதனை முறையில் முன்னெடுத்துள்ளது.

பெண்களுக்கு 10 சதவீதம் மாவட்ட செயலாளர் பதவி வழங்குவது. இதை பார்க்கும் எல்லா பெரிய கட்சிகளுக்கும் இது சவாலாக மாறும் என்றவர்.

ஆங்கிலம் பேசத்தெரியாது என்பது பிறவி குறைப்பாடு அல்ல, கற்றுக்கொள்ள மறுக்கப்பட்டது என்பது தான் உண்மை இது தான் சமூக அநீதி ஆக சமூக நீதியை கொச்சைப்படுத்தும் வகையில் தமிழக ஆளுநர் செயல்பட்டுவருகின்றார் என குற்றஞ்சாட்டியவர்.

ஜிப்மரில் அறிவிக்கபப்ட்டுள்ள சிகிச்சைக்கான கட்டண முறையை ரத்து செய்ய வேண்டும் இதை மறுத்தால் போராட்டம் தீவிரமடையும் என திருமாவளவன் பேசினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜிப்மர் மருத்துவமனையில் ஏழை மக்களிடம் கட்டணம் வசூலிப்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

கட்டணம் முறை குறித்து எளிய மக்களுக்கு எதிரான கருத்தை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவிக்கிறார் என குற்றம்சாட்டிய
தமிழக ஆளுநர் ரவி, உத்தரபிரதேசத்திற்கு சென்று அங்குள்ள சட்டம் ஒழுங்கை பார்த்து விட்டு பின்னர் தமிழக சட்டம், ஒழுங்கு குறித்து விமர்சிக்க வேண்டும் என்றும்ஆளுநர் ரவி தனது பதவியை விலகி முழு நேர அரசியல்வாதியாக மாற வேண்டும் என்றார்.

author avatar
Savitha