எவரும் கண்டிராத சக்தி வாய்ந்த திருக்கோவில்!ஒருமுறை வந்தாலே மீண்டும் வரவழைக்கும்!..

0
111

எவரும் கண்டிராத சக்தி வாய்ந்த திருக்கோவில்!ஒருமுறை வந்தாலே மீண்டும் வரவழைக்கும்!..

 

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளலூர் என்னும் ஊரில் அருள்மிகு தேனீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. கோயம்புத்தூர் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் வெள்ளலூர் என்னும் ஊர் உள்ளது. வெள்ளலூரில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.

அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் மூலவரான தேனீஸ்வரர் நாகாபரணத்துடன் எழுந்தருளியுள்ளார்.சித்திரை முதல் நாளன்று காலை சூரிய கதிர்கள் மூலவர் மீது பரவி ஒளிவீசுவது அற்புத காட்சியாகும்.

இத்தலம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மந்தாரை மரத்தில் பூக்கும் இளஞ்சிவப்பு வர்ணத்தில் உள்ள பூக்களை இங்கு பூஜைக்கு பயன்படுத்தினால் ராகு கேது தோஷத்தின் தாக்கம் குறைவதாக நம்பிக்கை.சிவகாம சுந்தரியின் சன்னதி முன்பாக சங்கர நாராயணன் திருமேனி அமைந்துள்ளது.

இவரை தேவலோக பசுவான காமதேனு வந்து வழிபட்ட பெருமைக்குரியதால் தேனீஸர் என அழைக்கப்படுகிறார். ஒரே கோபுரத்தின் கீழ் சுவாமியும் அன்னையும் தனித்தனி சன்னதிகளில் வீற்றிருப்பது அபூர்வம்.சூரியன்,63 நாயன்மார்கள், அகஸ்தியர், சித்தி விநாயகர், பஞ்சலிங்கேசர், பாலமுருகன், சண்டிகேஸ்வரர், சந்திரன், காலபைரவர், சனீஸ்வரர் ஆகியோர் தனிச்சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர்.

கோயிலின் உள்ளே நுழைந்தவுடன் சுற்று சுவற்றை ஒட்டி இடதுபுறம் மேற்கு நோக்கிய நிலையில் மிகச்சிறிய சன்னதியில் ஜோதிலிங்கேசர் வீற்றுள்ளார்.

கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர், லிங்கோத்பவர், துர்க்கை ஆகியோர் வீற்றிருக்கின்றனர்.தேய்பிறை அஷ்டமி, பிரதோஷம், ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம், ஆருத்ரா தரிசனம், மகா சிவராத்தரி ஆகிய விழாக்கள் இக்கோயிலில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

சத்ரு தோஷம், திருமணத்தடை, குழந்தையின்மை, ராகு கேது தோஷம் போன்றவற்றிற்கு இத்தலத்தில் பிரார்த்தனை செய்கின்றனர்.கல்வி மற்றும் தொழிலில் சிறந்து விளங்க இக்கோயிலில் பிராரத்தனை செய்கின்றனர்.

இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் சுவாமி மற்றும் அன்னைக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

author avatar
Parthipan K