குழந்தைகளை பாதிக்கும் புதிய   வகை வைரஸ்!! பீதியில் பெற்றோர்!!

0
124

குழந்தைகளை பாதிக்கும் புதிய   வகை வைரஸ்!! பீதியில் பெற்றோர்!!

கர்நாடகாவில் ஐந்து வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது முதல் ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜிகா வைரஸ் என்பது வளர்ந்து வரும் கொசுக்களால் பரவும் வைரஸ் ஆகும். மேலும், இந்த வைரஸ் தொற்று உள்ள பெரும்பாலான மக்களுக்கு பொதுவாக சொறி, காய்ச்சல், அலர்ஜி, தசை மற்றும் மூட்டு வலி, உடல் நலக்குறைவு மற்றும் தலைவலி போன்ற அறிகுறிகள் 2 முதல் 7 நாட்களுக்கு நீடிக்கும். ஜிகா வைரஸ் முக்கியமாக பகலில் கடிக்கும் ஏடிஸ் கொசுக்களால் பரவுகிறது.

ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பிறந்த குழந்தைகளில் 5- 15 சதவீதம் குழந்தைகளுக்கு பிறவி குறைபாடுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிகா வைரஸ் தொற்றை தடுக்கவோ அல்லது சிகிச்சை அளிக்கவோ இதுவரை தடுப்பூசி எதுவும் இல்லை. ஆகையால் கொசுக்களிடமிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

 

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

முதல் ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் உறுதி செய்துள்ளார். மேலும் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் நிலைமையை கண்காணித்து வருகிறோம் என அமைச்சர் தெரிவித்தார்.

கர்நாடகாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் மக்கள் கவலை கொள்ள வேண்டாம் என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.