வாய்ப்புண்ணை குணப்படுத்தும் புதிய வகை சட்னி! உடனே ட்ரை பண்ணுங்க!!

0
129

வாய்ப்புண்ணை குணப்படுத்தும் புதிய வகை சட்னி! உடனே ட்ரை பண்ணுங்க!!

நம் முன்னோர்கள் உணவே மருந்து மருந்தே உணவு என்று கூறி இருப்பார்கள். ஏனென்றால் நாம் உண்ணும் உணவுகள் பலவற்றிற்கு மருந்தாக பயன்படும். நாம் தினசரி வாழ்க்கையில் உணவு எடுத்துக் கொள்ளும் விதம் பெரும்வாரியாக மாறுபட்டுள்ளது.

அதிக அளவு காரமுள்ள தின்பண்டங்கள் மற்றும் ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடுவதால் வயிறு மற்றும் வாய்களில் புண்கள் ஏற்படும். பலருக்கு தினந்தோறும் மாத்திரையை மருந்து சாப்பிடுவதாலும் வயிறு மற்றும் வாய்களில் புண்கள் ஏற்படும். இவ்வாறு இருப்பவர்கள் மருத்துவரை நாடி அதற்கு தனியாக மருந்து மாத்திரை வாங்கி சாப்பிடுவர். இனி இந்த மாத்திரை எல்லாம் தேவையில்லை.

வீட்டிலேயே டேஸ்டியான ஹெல்தியான சட்னி மூலமே குணப்படுத்தி விடலாம். இதற்கு முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி சிறிதளவு சீரகம் கடலை பருப்பு வரக்கொத்தமல்லி, வரமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். அத்துடன் ஒரு கைப்பிடி சின்ன வெங்காயம் மற்றும் ஐந்து பல்லு பூண்டு சேர்த்துக் கொள்ள வேண்டும். இது நன்றாக வணங்கியதும் ஒரு கைப்பிடி அளவு மணத்தக்காளி கீரை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அதனையும் நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு இறக்குவதற்கு முன் சிறிதளவு தேங்காய் துருவலை சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். சிறிது நேரம் ஆரிய பிறகு மிக்ஸியில் நைசாக அரைத்து கொள்ள வேண்டும். இதற்கு தாளிப்பு போட்டால் சாப்பிட ரெடியாகிவிடும்.

பொதுவாகவே மணத்தக்காளி கீரை சாப்பிட்டாலே வயிற்றுப்புண் வாய் புண் குணமாகும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் பலருக்கும் கீரை என்பதே பிடிக்காது. குறிப்பாக மணத்தக்காளி கீரை சிறிதளவு கசக்கும் தன்மை உடையது. இந்த கசக்கும் தன்மையாலும் பலர் இதனை சாப்பிட மறுப்பர்.

ஆனால் நாம் இந்த சட்னியில் தேங்காய் சின்ன வெங்காயம் இதெல்லாம் சேர்ப்பதால் கசப்பு தன்மை சிறிதும் கூட தெரியாது. சாப்பிடுவதற்கும் மிகவும் ருசியாக இருக்கும்.