நாடு முழுவதிலும் அமலாகும் புதிய திட்டம்! நகைக்கடை உரிமையாளர்களுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ்!

0
194
#image_title

நாடு முழுவதிலும் அமலாகும் புதிய திட்டம்! நகைக்கடை உரிமையாளர்களுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ்!

மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் இந்தியாவில் ஹால்மார்க் அடையாளம் எண் பதிக்காத தங்க நகைகள் மற்றும் தங்க கலை பொருட்களை வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் விற்பனை செய்ய கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

உணவு மற்றும் நுகர்வோர் நலத்துறை அமைச்சர் பியூஸ் கோயில் தலைமையில் இந்திய தர நிர்ணய ஆணையத்தின் ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் குறு தொழில் தயாரிப்புகளின் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் தரச் சான்றிதழ் பெறுவதற்கான கட்டணங்களில் 80 சதவீதம் வரை சலுகைகள் அறிவிக்கவும், விற்பனை செய்யப்படும் தங்க நகைகளின் தரத்தை ஒழுங்குபடுத்தவும் ஹால்மார்க் அடையாளம்  எண் கொண்ட நகைகளின் விற்பனையை மட்டும் அனுமதிக்கப்படும் என முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நுகர்வோர் நலத்துறை கூடுதல் செயலாளர் நிதி காரே கூறுகையில் நுகர்வோரின் நலன் கருதி தங்க நகைகளின் தரத்தை உறுதிப்படுத்த ஹால்மார்க் அடையாள எண்ணை பதிக்கும் திட்டமானது கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த நடைமுறை 200க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது என கூறினார். அதனால் தனித்துவமான 4 அல்லது 6 இலக்கு ஹால்மார்க் அடையாளங்கள் பாதிக்காத தங்க நகைகள் மற்றும் தங்க கலை பொருட்களை ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். இதனால் தங்கத்தின் தரத்தை எளிதில் அடையாளம் காண முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K