மீண்டும் உருவாகிய புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! இங்கு மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம்!

0
122
A new low pressure area has formed again! Chance of rain here Chennai Meteorological Center!
A new low pressure area has formed again! Chance of rain here Chennai Meteorological Center!

மீண்டும் உருவாகிய புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! இங்கு மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம்!

கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது. அதனை தொடர்ந்து சென்னை வானிலை ஆய்வு மையமானது தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிவித்தது.அதனால் தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இந்த மாதம் முதலில் இருந்துதான் மழையின் அளவு குறைந்து.மேலும் தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு திசை மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் இன்று காலை 5.30 மணிக்கு காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது.

மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காலை 8.30 மணியளவில் தென்கிழக்கு வாங்க கடல் மற்றும் பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளின் நிலை கொண்டுள்ளது.இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த இரண்டு நாட்களில் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும்.

அதன் பிறகு மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஜனவரி 31 ஆம் தேதி தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து அதனை தொடர்ந்து பிப்ரவரி ஒன்றாம் தேதி இலங்கை கடற்பகுதிகளை சென்றடையும்.இதன்காரணமாக ஜனவறு 29.30,31 ஆகிய தேதிகளில் வடகடலோர மாவட்டங்களான புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K