மக்களை சந்திக்க துணிவில்லாத அமைச்சர்! பிரபல இயக்குனர் டிவிட்!

0
111

மக்களை சந்திக்க துணிவில்லாத அமைச்சர்! பிரபல இயக்குனர் டிவிட்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிநீரில் அசுத்தம் கலந்த விவகாரத்தில் காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.

மற்றும் இந்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காத அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வேங்கைவையல் கிராமத்தில் குடிநீர் மேல்நிலை தொட்டியில் மனித கழிவுகள் கலந்திருந்தது கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி கண்டறியப்பட்டது. இது குறித்து வெள்ளனூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. குடிநீர் தொட்டியில் அசுத்தம் செய்தது யார் என கண்டுபிடிக்க மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணன் தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்த பேசிய முதலமைச்சர் குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து இயக்குனர் பா ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அதில் தொடரும் சமூக அநீதி, புதுக்கோட்டை வேங்கை வயல் பகுதியில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்தது யார் என கண்டுபிடிக்காமல் பாதிக்கப்பட்ட மக்களையே குற்றத்தை ஒப்புக் கொள்ளுமாறு விசாரணை என்ற பெயரில் மிரட்டி வரும் காவல்துறைக்கு கண்டனங்கள். கொடுமைகளை சந்தித்த மக்களை சந்திக்க துணிவு இல்லாத ஆதிதிராவிட நலத்துறை அமைச்சருக்கும், பட்டியலின மக்களுக்காக எந்த நடவடிக்கையும் எடுக்காத கழகங்களின் தனித்தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கடும் கண்டனங்கள். என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனங்களை பதிவிட்டுள்ளார்.