அரசியலுக்கு முழுக்கு போடும் முக்கிய நிர்வாகிகள்! அதிர்ச்சியில் திமுக தலைமை!

0
74

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில் அனைவரையும் முந்திக்கொண்டு திமுக முன்னெடுத்துவரும் பிரச்சாரம் அந்த கட்சி நிர்வாகிகள் இடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கின்றது.

தங்களுடைய காசை வைத்து இவ்வளவு நிகழ்ச்சிகளை நடத்துவது? நிலைமை இவ்வாறு நீடிக்குமானால் தேர்தலுக்குள் தெருவுக்கு வந்து விடுவோம் என்று அலறிக்கொண்டு இருக்கிறார்கள் அந்த கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள். இதில் வரும் சட்டமன்ற தேர்தலை முன்வைத்து திமுக சார்பாக விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பிரச்சார நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டு இருக்கின்றது கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தஞ்சை மாவட்டத்திலும் மகளிர் அணி செயலாளர் கனிமொழி சேலம் மாவட்டத்திலும் தங்களுடைய பிரச்சாரத்தை ஆரம்பித்து இருக்கிறார்கள் பத்திற்கும் மேற்பட்ட திமுக முன்னணி நிர்வாகிகள் பல மாவட்டங்களில் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்கள்.

கட்சியின் நிகழ்ச்சிகளை அதிலும் குறிப்பாக உதயநிதி நிகழ்ச்சிகளை மிகப்பிரம்மாண்டமாக நடத்துவதற்கு தலைமையில் இருந்து மாறி மாறி உத்தரவுகள் வந்து கொண்டே இருக்கின்றன அதே சமயம் செலவுகளுக்காக ஒரு பைசாகூட தலைமையிலிருந்து வராதது தான் கட்சி நிர்வாகிகளை கலக்கத்தில் ஆழ்த்தி இருக்கின்றது இது சம்பந்தமாக மத்திய மண்டலத்தைச் சார்ந்த ஒரு மூத்த மாவட்டச் செயலாளர் மனம் நொந்து கூறுகையில் கிட்டத்தட்ட நாற்பது வருட அரசியல் அனுபவம் எனக்கு இருக்கின்றது என்னுடைய அனுபவத்தில் இந்த வருடம் அரசியலுக்கு செலவு செய்தது மாதிரி வேறு எப்போதும் செலவு செய்யவில்லை கொரோனா நிவாரணம் தொடங்கி இப்போது விடியலின் குரல் நிகழ்ச்சியில் இந்த வருடம் இதுவரை மட்டும் எண்ணற்ற நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கின்றோம் மொத்தமாக என் கையில் இருந்த மட்டும் ஒரு கோடி ரூபாய் வரை செலவாகி இருக்கின்றது. இவை தவிர மற்ற மாவட்ட நிர்வாகிகளும் அவரவர் தகுதிக்கு ஏற்ப செலவு செய்திருக்கிறார்கள்.

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்கள் இருக்கின்றன இன்னும் எத்தனை எத்தனை நிகழ்ச்சிகள் நடத்த வேண்டி இருக்குமோ இப்போதெல்லாம் தலைமையிலிருந்து அழைப்பு வந்தாலே பயமாக இருக்கின்றது சரி இவ்வளவு செலவு செய்கிறோமே ஒரு சீட்டாவது கிடைக்குமா என்றால் அதுதான் கிடையாது யார் யாரோ வெளி மாநில காரர்களுக்கு கோடி கோடியாக கொட்டிக் கொடுத்து ஆட்களை தேர்வு செய்த செய்கிறார்களாம் ஆகவே மொத்தத்தில் உழைக்க ஒரு கூட்டம் பிழைக்க இன்னொரு கூட்டம் என்ற நிலையில் தான் எங்களுடைய கட்சி இருந்து வருகின்றது.

திமுகவைப் பொறுத்தவரை கட்சி நடத்துவது சுலபமான விஷயம் கிடையாது சமாளிக்கவே இயலவில்லை சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் முடிவு எப்படி இருக்குமோ என்பதை தவிர்த்து அரசியலுக்கு முழுக்கு போடுவது என்ற எண்ணத்தில் தான் என்னைப் போன்ற அனேக நிர்வாகிகள் இருந்து வருகிறார்கள் என்று தெரிவிக்கிறார்கள்.