ஆத்தூரில் பேருந்து -வேன் நேருக்கு நேர் மோதி கோர விபத்து!..அப்பளம் போல் நொறுங்கிய வேன்!!..6 பேர் பலி? ஓட்டம் பிடித்த ஓட்டுனர்?

0
137
A head-on collision between a bus and a van in Attur!..The van was crushed like a pancake!!..6 people died? A racing driver?
A head-on collision between a bus and a van in Attur!..The van was crushed like a pancake!!..6 people died? A racing driver?

ஆத்தூரில் பேருந்து -வேன் நேருக்கு நேர் மோதி கோர விபத்து!..அப்பளம் போல் நொறுங்கிய வேன்!!..6 பேர் பலி? ஓட்டம் பிடித்த ஓட்டுனர்?

சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா புதுப்பேட்டை லீ பஜார் வக்கீல் கிட்டா முஸ்தபா தெருவை சேர்ந்தவர் தான் ஆறுமுகம். இவர் ஆட்டோ மெக்கானிக் ஆவார்.இவர் கடந்த மாதம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

இந்நிலையில் துக்கம் விசாரிக்க நேற்று முன்தினம் அவரது வீட்டுக்கு உறவினர்கள் ஏராளமானவர்கள் வந்தனர்.ஆறுமுகத்தின் வீட்டில் போதிய இடம் வசதி இல்லாததால் பலர் வீட்டின் வெளிப்பகுதியில் அமர்ந்தனர்.

அப்போது துக்க வீட்டுக்கு வந்த11பேர் இரவு12.30 மணி அளவில் ஒரு வேனில் டீ குடிப்பதற்காக ஆத்தூர் புறவழிச்சாலைக்கு சென்றனர். வேனை நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சி.எச்.பி. காலனியை சேர்ந்த டிரைவர் ராஜேஷ் என்பவர் ஓட்டி வந்தார்.வேன் ஆத்தூர் அருகேவுள்ள துலுக்கனூர் கிராமம் ஒட்டம்பாறை என்ற இடத்தில் சாதுவாக சென்று கொண்டிருந்தது.

இந்நிலையில் சேலத்திலிருந்து சென்னை நோக்கி சென்ற ஆம்னி பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது.திடிரென கண்ணிமைக்கும் நேரத்தில் வந்து கொண்டிருந்த வேனும் ஆம்னி பேருந்தும் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் பயங்கரமாக மோதியது.இந்த விபத்தால்  வேன் அப்பளம் போல் நொறுங்கியது.

இந்த கோர விபத்தில் வேனை ஓட்டி வந்த டிரைவர் ராஜேஷ்,அவரது தங்கை ரம்யா,புதுப்பேட்டை லீ பஜார் வக்கீல் கிட்டா முஸ்தபா தெருவை சேர்ந்த மயில்வாகனன் மகள் சந்தியா,சுதாகர் மனைவி சரண்யா, சந்தோஷ்குமார் மனைவி சுகன்யா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர்களை போலீசார்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்நிலையில்  மருத்துவமனைக்கு  செல்லும் போதே சந்தோஷ்குமார் மகள் தன்ஷிகா என்ற சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பி சென்ற பேருந்து ஓட்டுனரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.இந்நிலையில் தப்பி ஓடிய ஆம்னி பேருந்து ஓட்டுனர் முத்துச்சாமி என்பவரை ஆத்தூர் போலீசார் இன்று காலை கைது செய்துள்ளனர்.

அவரிடம் விபத்து தொடர்பாக பல விசாரணைகளை  மேற்கொண்டு நடத்தி வருகின்றனர்.இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.

author avatar
Parthipan K

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here