ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்!! இனி இரண்டு நிமிடங்கள் போதும்!!

0
216
#image_title

ரேஷன் அட்டை தாரர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்!! இனி இரண்டு நிமிடங்கள் போதும்!!

ரேஷன் கடைகளில் இரண்டு ரசீது போடும் திட்டம் புதியதாக அமலுக்கு வந்துள்ளது. இது ரேஷன் அட்டைதாரர்களின் காத்திருப்பு நேரத்தை குறைப்பதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மக்களின் நலனுக்காக அதிக அறிவிப்புகளையும், புதுபுது வசதிகளையும் தினமும் தமிழக அரசு செய்து வருகிறது. இதன் அடிப்படையில் கொண்டுவரப்பட்டது தான் இந்த இரண்டு ரசீது போடும் திட்டம்.

இந்த திட்டம் ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. அதன்படி, மத்திய அரசின் இலவச அரிசிக்கு ஒரு ரசீது என்றும், தமிழக அரசு வழங்கும் பொருட்களுக்கு ஒரு ரசீது என்று இரு ரசீதுகளின் அடிப்படையில் பொருட்கள் வழங்கப்பட்டது.

இதில் பிஎச்எச் மற்றும் அந்தியோதயா அன்னயோஜனா திட்ட ரேஷன் அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. இவ்வாறு விநியோகம் செய்யும் போது மத்திய அரசின் கீழ் ஒரு ரசீதும், மாநில அரசின் கீழ் ஒரு ரசீதும் வழங்கப்படுகிறது.

இதனால் ரசீது போடுவதற்கு கால தாமதம் எற்படுகிறது. பெரும்பாலும் இந்த முன்னுரிமை  பெற்றுள்ளது முதியவர்கள் தான் அதனால் அவர்களிடம் கைரேகை ஒரு முறை வாங்கவே சிரமமாக உள்ளதாகவும், வாக்குவாதங்கள் ஏற்படுவதாகவும் ரேஷன் கடை ஊழியர்கள் கூறி உள்ளனர்.

எனவே இந்த இரண்டு ரசீது போடும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அனைவரும் கோரிக்கை வைத்தனர். இதனால் புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ள நிலையில் பிஓஎஸ் இயந்திரத்தில் இரண்டு ரசீது போடும் போது ஏற்பட்ட 5 நிமிட காலநேரம் தற்போது 2 நிமிடங்களாக குறைக்கப்படும் அப்டேட்டை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த இரண்டு நிமிட கால தாமதமும் ஏற்படாத வகையில் மற்றுமொரு புதிய மேம்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது. அதில் முதல் ரசீது போட்ட உடனேயே இரண்டாவது ரசீது போட ஏற்பாடு செய்யப்பட்டு நேற்று முதல் துவங்கி உள்ளது.

இதனால் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

author avatar
CineDesk