7 பேர் விடுதலை! நல்ல செய்தி சொன்ன ஓபிஎஸ்!

0
79

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையில் சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதுதான் புரட்சித்தலைவி அம்மாவின் அரசுடைய நிலை என தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார்.

சென்ற 20 வருடங்களுக்கு மேலாக முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், பேரறிவாளன், நளினி ,போன்ற ஏழு நபர்களும் சிறையில் இருந்து வருகிறார்கள். இதனை அடுத்து ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இருந்து தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த சூழ்நிலையில், 7 பேர் விடுதலை சம்பந்தமாக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .அது ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த விஷயத்தில் தலையிட்டு இருக்கின்ற உச்சநீதிமன்றம், இந்த விஷயத்தில் முடிவெடுக்காமல் இருக்கின்ற ஆளுநருக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்ததுடன் இது தொடர்பாக முடிவு எடுப்பதற்காக கடைசியாக ஒரு வார காலம் அவகாசம் கொடுத்து இருக்கிறது.

இது குறித்து தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தன்னுடைய வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்ற செய்திக்குறிப்பில் ,பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுவிக்க சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்ட பின்பு அமைச்சரவையில், தீர்மானம் நிறைவேற்றி அதனை ஆளுநருக்கு அனுப்பி வைத்ததும் மாண்புமிகு அம்மாவின் அரசு தான் என்று தெரிவித்திருக்கிறார்.

அதோடு ராஜீவ் கொலையில் சிறையிலிருந்து வரும் ஏழு பேரையும் அந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்பதுதான் அம்மா அரசின் நிலைபாடு. மிக விரைவில் ஒரு நல்ல முடிவு வரும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம் என்று தன்னுடைய வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் ஒ.பி.எஸ்.